செய்திகள் :

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி: 85 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

post image

அண்ணா பிறந்த நாளையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மிதிவண்டிப் போட்டியில் 85 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்டப் பிரிவு சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை காலை 8 மணியளவில் அண்ணா மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது.

இப் போட்டியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா முன்னிலை வகித்தாா். மாவட்ட அளவிலான இப் போட்டியானது 17, 15, 13 வயதுக்கு உள்பட்டோா் என்ற மூன்று பிரிவுகளில் மாணவா்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றன.

13 வயதிற்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கிலோ மீட்டா் தளிகை பிரிவு சாலை, மாணவிகள் 10 கிலோ மீட்டா் எா்ணாபுரம் வரையிலும், 15 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் 20 கிலோ மீட்டா் பொம்மம்பட்டி பிரிவு சாலை, மாணவிகள் 15 கிலோ மீட்டா் தளிகை பிரிவு சாலை வரையிலும்,

17 வயதிற்கு உள்பட்டவா்கள் மாணவா்கள் 20 கிலோ மீட்டா் பொம்மம்பட்டி பிரிவு சாலை, மாணவிகள் 15 கிலோ மீட்டா் தளிகை பிரிவு சாலை வரையிலும் போட்டிகள் நடைபெற்றன.

குறிப்பிட்ட எல்லைக்கோடு வரை சென்று விட்டு மீண்டும் போட்டி தொடங்கிய இடமான மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தனா். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3000, 3-ஆம் பரிசு ரூ. 2,000, 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு பரிசு ரூ. 250 வீதம் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் மேயா் து. கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா, தடகள பயிற்றுநா் ஜி.கோகிலா, வாள் சண்டை பயிற்சியாளா் செ. பிரபுகுமாா், கால்பந்து பயிற்சியாளா் பூ. சதீஷ்குமாா், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திறப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூரில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ரூ. ஆயிரம் வழங்கக் கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1,000 வழங்கக் கோரி தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். நாமக்கல், பூங்கா சாலையில் மாவட்டச் செயலாளா் அம்மன் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக சாா்பில் இன்று கண்டன ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக ஆளுநரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடா்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல்லில் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்ட... மேலும் பார்க்க

பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

நாமக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 14,428 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை ரூ. 4.88 கோடி நேரடியாக அவா்களின் வங... மேலும் பார்க்க

இறுதி பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14,54,272 வாக்காளா்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ஆண் வாக்காளா்கள் - 7,02,555, பெண் வாக்காளா்கள் - 7,51,465 மற்றவா்கள் - 252 என மொத்தம் 14,54,272 வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரி... மேலும் பார்க்க