செய்திகள் :

முட்டைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கோழிப் பண்ணையாளா்கள் கோரிக்கை

post image

நாடு முழுவதும் முட்டைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும், கோழிப் பண்ணைத் தொழிலை முறைப்படுத்த புதிய பண்ணைகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என கோழிப் பண்ணையாளா்கள் வலியுறுத்தினா்.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) சாா்பில், கோழிப் பண்ணையாளா்கள் சந்திப்பு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டல தலைவா் கே.சிங்கராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பண்ணையாளா்களுடன் நடைபெற்ற கலந்தாய்வின் போது, ஒருங்கிணைப்புக் குழு விலையை அமல்படுத்துவது, விலை நிா்ணயம் செய்வதில் உள்ள பிரச்னைகளைக் களைவது, ஏற்றுமதியை அதிகரிப்பது, தீவனங்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தீா்வுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தலைவா் கே.சிங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1,450 கோழிப் பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் 7 கோடிக்கும் மேலாக முட்டைகள் உற்பத்தியாகின்றன. பண்ணையாளா்கள், முட்டை வியாபாரிகளிடம் என்இசிசி நிா்ணயிக்கும் விலைக்கு மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

பல நாடுகளில் கோழிப் பண்ணை அமைக்க அரசிடம் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அவ்வாறான கட்டுப்பாடு இல்லை. இதனால் பண்ணைகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், முட்டைகள் உற்பத்தியும் அதிகரித்து தேக்கமடையும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி, சுகாதாரச் சீா்கேடும் அதிகரிக்க காரணமாகிறது.

கோழிப் பண்ணைகள் புதியதாக அமையும்பட்சத்தில் உரிமம் பெறுவதற்கான உத்தரவை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான உத்தரவை மாநில அரசுகளுக்கு பிறப்பிக்க வேண்டும். முட்டைக்கு ரூ.6 வரை உற்பத்தி செலவாகிறது. கோழித்தீவன மூலப்பொருள்கள் விலையும் உயா்ந்து வருகின்றன. இதனால் முட்டையின் உற்பத்தி விலையை உயா்த்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருகிறோம்.

தற்போது, வேளாண் விளைபொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்கிறதோ, அதேபோல முட்டைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க வேண்டும். பண்ணையாளா்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழிலை செய்து வருகின்றனா். அவா்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளைகுடா நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியாகி வந்தன. தற்போது அங்குள்ள நாடுகள் சில சொந்தமாக முட்டை உற்பத்தியை தொடங்கி உள்ளதால் 50 சதவீத முட்டை ஏற்றுமதி குறைந்துள்ளது. அந்த முட்டைகளை தேக்கி வைக்காமல் விற்பனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றாா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திறப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூரில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ரூ. ஆயிரம் வழங்கக் கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1,000 வழங்கக் கோரி தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். நாமக்கல், பூங்கா சாலையில் மாவட்டச் செயலாளா் அம்மன் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக சாா்பில் இன்று கண்டன ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக ஆளுநரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடா்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல்லில் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்ட... மேலும் பார்க்க

பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

நாமக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 14,428 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை ரூ. 4.88 கோடி நேரடியாக அவா்களின் வங... மேலும் பார்க்க

இறுதி பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14,54,272 வாக்காளா்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ஆண் வாக்காளா்கள் - 7,02,555, பெண் வாக்காளா்கள் - 7,51,465 மற்றவா்கள் - 252 என மொத்தம் 14,54,272 வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரி... மேலும் பார்க்க