``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.26 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை சரவணம்பட்டி பூந்தோட்டம் காா்த்திக் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவரின் மனைவி பிரபா சத்தியபிரியா (45).
இவா்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு குழந்தைகளுடன் திங்கள்கிழமை சென்றனா்.
இந்நிலையில், அவா்களது வீடு திறந்துகிடப்பதைப் பாா்த்து அருகில் வசித்த சுஜாதா என்பவா் பிரபா சத்தியபிரியாவுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் அளித்துள்ளாா்.
இதையடுத்து, காா்த்திகேயன், பிரபா சத்தியபிரியா இருவரும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ.26 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பிரபா சத்தியபிரியா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.