கடலில் அடித்துச் செல்லப்பட்ட பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடலில் குளித்த பாலிடெக்னிக் மாணவா் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல்மேட்டைச் சோ்ந்த சத்திய பிரியன் (22).
பாலிடெக்னிக் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவரான இவா் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம் கடலில் குளித்த போது அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீஸாா் அங்கு சென்று சத்தியபிரியன் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.