ஒபாமாவை ஈர்த்த இந்திய திரைப்படம் - அவர் வெளியிட்ட பேவரைட் பட்டியல் இதோ
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார். அவரின் பிடித்த படங்கள் பட்டியலில் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
All We Imagine As Light!
இந்தத் திரைப்படத்தை கேரளாவில் பிறந்து மும்பையில் வசித்துவரும் பாயல் கபாடியா இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கான் திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்குப் பிறகு 'கான் திரைப்பட விழா'விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாக அமைந்தது ஆல் வி இமேஜின் அஸ் லைட்.
இந்தத் திரைப்படத்தில் மலையாள நடிகைகளான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேரளாவிலிருந்து மும்பைக்குப் புலம்பெயர்ந்து வரும் இரண்டு செவிலியர்களின் கதையை மையமாகக் கொண்டது இந்தத் திரைப்படம். மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், உலகம் முழுவதிலுமிருந்து தனக்கு ரசிகர்களை உருவாக்கிக்கொண்டுள்ளது என்பதற்கு ஒபாமாவே சான்று.
நீங்கள் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்தைப் பார்த்துவிட்டீர்களா? கமன்ட்டில் சொல்லுங்க!
ஒபாமாவுக்கு பிடித்த மற்ற திரைப்படங்கள்,
ஒபாமாவின் ஏவரைட் பாடல்கள்,
ஓபாமாவை ஈர்த்த புத்தகங்கள்!
ஒபாமாவின் ரீடிங் லிஸ்ட்