செய்திகள் :

பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை!

post image

ஜெய்சால்மரில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கு 18சதவீத வரை வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் பயன்படுத்தப்பட்ட சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டியை 12% இல் இருந்து 18% ஆக உயர்த்த கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இதனிடையே இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜாம்பியா அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இருவர் கைது!

ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஜனவரி மாதம் கூடி விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டிய பின்னரே இதில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, "கவுன்சிலின் சில உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் கூடுதல் விவாதம் தேவை என்று நினைக்கிறார்கள்" என்றார்.

பி.எஸ்.எல்.வி. சி -60: விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன - இஸ்ரோ

பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி -60!

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச. 30) விண்ணில் செலுத்தப்பட்டது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் ஏவ... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுன் தனித்துவிடப்பட்டது சரியல்ல: பவன் கல்யாண்

புஷ்பா - 2 திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் தனித்துவிடப்பட்டது சரியானதல்ல என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். காவல் துறையை தான் குறை ... மேலும் பார்க்க

வாக்காளர் அட்டை பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த 18 வயது இளம் பெண் ராதா, தில்லி தேர்தலையொட்டி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார். தேர்தல் என்ற ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதற்கான கடமை என்பதோடு மட்ட... மேலும் பார்க்க

பாஜகவுக்கு என்ன? ராகுலின் வியத்நாம் பயணம் குறித்து காங்கிரஸ் கேள்வி!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைந்து ஒரு சில நாள்களுக்குள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வியத்நாம் பயணம் மேற்கொண்டிருப்பதற்கு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்த... மேலும் பார்க்க

எல்லாம் தெரிந்த ஏஐ-யிடம் சொல்லக் கூடாத ஆறு விஷயங்கள்!

செயற்கை நுண்ணறிவு என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒற்றை வார்த்தையில் கட்டிப்போட்டிருக்கும் ஏஐ எனப்படும் செய்யறிவு உண்மையில் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உலகம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில... மேலும் பார்க்க