பாக். டெஸ்ட்: 18 வயது வீரருக்கு தெ.ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு!
பணிபுரிய சிறந்த இடம் என்ற சான்றிதழை பெற்ற 'செயில்'!
புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த 'செயில்' (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்), பணிபுரிய சிறந்த இடம் என்ற சான்றிதழைப் பெற்றுள்ளது.
செயில் ஜனவரி 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான மதிப்புமிக்க 'பணிபுரிய சிறந்த இடம்' என்ற சான்றிதழை, கிரேட் பிளேஸ் டு ஒர்க் இன்ஸ்டிடியூட் வழங்கியது என்று எஃகு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் நேரடி கருத்துகளின் அடிப்படையில், பணிபுரிய சிறந்த இடம் 'செயில்' என்ற சான்றிதழைப் இரண்டாவது முறையாக பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான போக்குகளால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!
பொதுத்துறை நிறுவனமானது முதலில் டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை சான்றளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வேலை செய்வதற்கான சிறந்த இடம் என்ற செயிலின் சான்றிதழ், ஒரு விதிவிலக்கான பணியிட கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பணியாளர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஊழியர்களின் அனுபவத்தை வழங்குவதற்கும் செயிலின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் இது உறுதிப்படுத்தியுள்ளது என்றார் நிறுவனத்தின் தலைவர் அமரேந்து பிரகாஷ்.