செய்திகள் :

RamRaj: ஜனவரி 1 முதல் 7 வரை! - ராம்ராஜ் நடத்தும் வேட்டி வார கொண்டாட்டம்

post image
இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களது மனதில் அது ஆழப்பதிந்து, தொடர்ந்து அவர்கள் ஈடுபாட்டுடன் வேட்டி என்ற இந்திய கலாச்சார உடையின் மகத்துவம் அவர்கள் வாழ்வில் ஒரு பகுதியாக மாற ராம்ராஜ் தன் முயற்சிகளை எடுத்து வருகிறது.

வேட்டிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்து ராம்ராஜ் காட்டன் இந்த ஆண்டு வேட்டி வாரம் 2025 ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாட ரூ.695/க்கு CULTURE CLUB கலர் சர்ட் மற்றும் வேட்டி அறிமுகம் செய்துள்ளனர். இந்திய தேசிய பாரம்பரியம் ஒவ்வொரு நிலையில் அனைவருக்கும் பரந்து விரிய இந்த வேட்டிவாரம் தயாரிப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். ராம்ராஜ், விவசாய கிராமப்புற நெசவாளர் நலன் கருதி பெருமளவில் வாடிக்கையாளரை சென்றடைய வாங்கும் விலையில் இந்த ஆண்டு வேட்டி வார கொண்டாட்டத்திற்கு 3 வேட்டிகளின் கோம்போ பேக்கை விற்பனைக்கு விடுக்கிறது.

இந்த கோம்போ பேக் ரகங்கள் தமிழகத்தில் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் மற்றும் ராம்ராஜ் கம்பெனி ஷோரூம்களிலும் கையிருப்பு உள்ள வரை விற்பனையில் இருக்கும். அரசாங்கத்தால் 2015-ல் தொடங்கி வைக்கப்பட்ட ஜனவரி 6 வேட்டி தினத்தை ராம்ராஜ் வேட்டி வாரமாக கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுபுது ரகங்களை அறிமுகப்படுத்தி, இந்திய கலாச்சார உடையான வேட்டியின் உபயோகம் பெருமளவில் உயர ராம்ராஜ் எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்து வெற்றி பெற்று வருகிறது.

வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனையாளர் திரு.கே.ஆர்.நாகராஜன் ராம்ராஜ் நிறுவனர். கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்து காந்தி கண்ட கனவினை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து கடந்த 8 ஆண்டுகளாக வேட்டி வாரம் கொண்டாட்டங்களை திறம்பட மேற்கொண்டு வருகிறது.

லிட்டில் ஸ்டார் குழந்தைகள் வேட்டிகள் முதல் ஜெனெக்ஸ்ட் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் வரை இன்று மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இளைஞர்கள் அனைவரையும் வேட்டி கட்ட வைத்த ராம்ராஜ், இந்த ஆண்டு வேட்டி வார விற்பனைக்கு சலுகை விலையில் அறிமுகப்படுத்தியுள்ள மேற்க்கூறிய வேட்டி ரகங்களை வாடிக்கையாளர்கள் பெற்று 2024 புத்தாண்டில் பாரம்பரிய கலாச்சாரம் இன்றும் வளர்ந்துயர் தன் முன் முயற்சிகளை முன்னெடுத்து வைத்துள்ளது.

தமிழர் பாரம்பரிய பண்டிகை பொங்கல் 2025 க்கான முதல் பரிசாக வேட்டிவார ரகங்கள் பயனளிப்பதாக இருக்கும். விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. K.R.நாகராஜன், நிர்வாக இயக்குனர் திரு. B.R. அருண் ஈஸ்வர், தலைமை செயல் நிர்வாகிகள் திரு. K.A. செல்வருமார், திரு.A. கணபதி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். மேற்க்கூறிய சலுகைகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தும் என்று திரு. K.R.நாகராஜன் அறிவித்தார்.

பிசினஸ் கருத்தரங்கில் விகடன் 'லாபம்' ஸ்டால்! ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அரிய வாய்ப்பு! அனைவரும் வருக

இளம் தொழில்முனைவோர்க்கான வழிகாட்டி அமைப்பான 'யெங் ஆன்ட்ரபிரினர் ஸ்கூல்' (YOUNG ENTREPRENEUR SCHOOL - YES), சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் வருகிற4 , 5 (சனி மற்றும் ஞாயிறு) அன்று ... மேலும் பார்க்க

GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், நீண்ட காலமாகச் சிறப்பிற்கும் மற்றும் கைவினைத் திறமைக்குமான அடையாளமாக விளங்குகிறது.இந்நிறுவனத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் உறுத... மேலும் பார்க்க

Adani: 'ஒரு வாரமாக சரிந்த அதானி குழும பங்குகள்... இன்று ஏறுமுகம்' - காரணம் என்ன?!

அதானி மீதான அமெரிக்காவின் மோசடி குற்றசாட்டால் அதானி குழுமம் முதல் அதன் பங்குகள் வரை ஆட்டம் கண்டாலும், தற்போது மீண்டும் அது ஏறுமுகத்தில் நகர தொடங்கியிருக்கிறது. மேலே சொன்னதற்கு உதாரணமாக, நேற்றைய அதானி ... மேலும் பார்க்க

1,26,000 ஊழியர்கள்; 12 பில்லியன் டாலர் டர்ன் ஓவர்; பஹ்ரைன் அரசின் உயரிய விருதைப் பெற்ற இந்தியர்

பஹ்ரைன் அரசின் உச்சபட்ச 'செயல்திறன் விருதை' ( Medal of Efficiency) அந்த நாட்டு அரசு இந்திய தொழிலதிபர் டாக்டர் ரவி பிள்ளைக்கு வழங்கியிருக்கிறது. இந்த விருதைப் பெற்ற ஒரே வெளிநாட்டவர் இவர் தான் என்ற பெரு... மேலும் பார்க்க

Mysore Sandal Soap: வரலாறு காணாத வருமானம்; ரூ.108 கோடியை அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கி அசத்தல்!

மைசூர் சாண்டல் சோப் என்ற பிரபல சோப் கர்நாடகா அரசின் பொதுத்துறை நிறுவன தயாரிப்பாகும். சந்தன மண் என்றழைக்கப்படும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இன்றளவும் சந்தன மரங்கள் செழித்தோங்குகின்றன. திரவ தங்கமாகக் கர... மேலும் பார்க்க

GRT: உலகின் அதிக எடை கொண்ட தங்க காதணி; கின்னஸ் சாதனை படைத்த ஜி. ஆர்.டி ஜூவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் படைத்துள்ளது, மீண்டும் ஒரு உலக சாதனை.ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், அறுபது ஆண்டுகளாக நகைத்துறையில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது, தற்போது அதன் 60-வது ஆண்டு சிறப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ... மேலும் பார்க்க