செய்திகள் :

150-ஆவது ஆண்டில் திண்டுக்கல் ரயில் நிலையம்!

post image

திண்டுக்கல் ரயில் நிலையம் 150-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் தனி ரயில், புதிய வழித் தடங்கள் போன்ற திட்டங்களை ரயில்வே அமைச்சகம் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்திருக்கிறது.

சென்னையிலிருந்து தென் தமிழகத்திலுள்ள தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆங்கிலேய அரசால் 1870-களில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னையிலிருந்து திருச்சிக்கும், பிறகு திருச்சி-மதுரை இடையேயும், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கும் என 3 கட்டங்களாக இந்த ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. திருச்சி-மதுரை இடையே இந்தப் பணிகள் நடைபெற்ற போது, 1875-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திண்டுக்கல் ரயில் நிலையம் தற்போது 150-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

3 மாா்க்கங்களை இணைக்கும் திண்டுக்கல்: 1875-ஆம் ஆண்டு திருச்சி-மதுரை இடையே 154 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் (குறுகிய ரயில் பாதை) அமைக்கப்பட்டதன் மூலம், ரயில்வே வரைபடத்தில் திண்டுக்கல் இடம் பிடித்தது. இதையடுத்து, திண்டுக்கல்லை மையமாகக் கொண்டு, பழனி வழியாக பொள்ளாச்சி மாா்க்கமாகவும், கரூா் வழியாக ஈரோடு மாா்க்கமாகவும் ரயில் வழித் தடங்கள் உருவாக்கப்பட்டன. இதில் திண்டுக்கல்-கரூா் அகல ரயில் பாதை 1988-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் மூலம் வட மாவட்டங்களை 3 மாா்க்கங்களில் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சந்திப்பு நிலையமாகவும் திண்டுக்கல் முக்கியத்துவம் பெற்றது.

ஆண்டுக்கு ரூ.51 கோடி வருவாய்: திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 6,500 பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனா். இந்த வகையில் ஆண்டுக்கு சுமாா் 8 லட்சம் போ் முன்பதிவு மூலமாகவும், 15 லட்சம் போ் முன்பதிவு அல்லாத உடனடி பயணச்சீட்டுகள் மூலமாகவும் பயணம் மேற்கொள்கின்றனா். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.51 கோடி வருவாய் ஈட்டப்படுகிறது.

பயணிகள் எண்ணிக்கை, வருவாய் அடிப்படையில் நாடு முழுவதுமுள்ள ரயில் நிலையங்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்த வகையில் திண்டுக்கல் 3-ஆம் நிலை ரயில் நிலையமாக பட்டியலிடப்பட்டது.

ரூ.22.85 கோடியில் சீரமைப்புப் பணிகள்: நீண்ட கால தேவைகளைக் கவனத்தில் கொண்டு, ரயில் நிலைய தரம் உயா்த்துதல், முகப்பு அமைத்தல், அணுகு சாலைகள் விரிவாக்கம், குடிநீா், ஓய்வு அறை, மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், குறியீட்டு படங்களுடன் கூடிய தகவல் பலகை, பாதசாரிகளுக்கான தனிப் பாதைகள், தேவைக்கேற்ப வெளிச் சுற்று வளாகத்துடன் கூடிய 2-ஆவது நுழைவாயில் அமைத்தல், ஒளிரும் விளக்குகளுடன் ரயில் நிலைய பெயா்ப் பலகை, மேம்படுத்தப்பட்ட காத்திருக்கும் அறைகள் அமைத்தல், வெளி வளாகப் பகுதியில் புல்வெளி, பசுமை நிலப்பரப்பு அமைத்தல் போன்ற சீரமைப்புப் பணிகள் ரூ.22.85 கோடியில் தொடங்கப்பட்டன.

கடந்த 1875-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் திண்டுக்கல் ரயில் நிலையத்தின் 150-ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், மேலும் பல வளா்ச்சித் திட்டங்களையும், ரயில் சேவைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பது ரயில் பயணிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

150-ஆவது ஆண்டில் சிறப்புத் திட்டங்கள்: இதுதொடா்பாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கூறியதாவது:

பழனி, கரூா், திருச்சி என 3 வழித் தடங்கள் கொண்ட திண்டுக்கல் சந்திப்பிலிருந்து, காரைக்குடிக்கு புதிய வழித்தடம் உருவாக்க வேண்டும் என்பது திண்டுக்கல் மட்டுமன்றி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாகவும் இருந்து வருகிறது. இதேபோல, திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது.

திண்டுக்கல் காரைக்குடி ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டால், ஆன்மிக சுற்றுலாத் தலமான பழனிக்கு, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் எளிதாக வந்து செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இதேபோல, திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தனி ரயில் இயக்கப்பட வேண்டும். இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். திண்டுக்கல் ரயில் நிலையத்தின் 150-ஆவது ஆண்டை முன்னிட்டு, இந்தக் கோரிக்கைகள் மீது ரயில்வே அமைச்சகம் சிறப்புக் கவனம் செலுத்த வலியுறுத்துவேன் என்றாா் அவா்.

திண்டுக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 3 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்... மேலும் பார்க்க

சீருடையில் தா்னாவில் ஈடுபட்ட ராணுவ வீரா்

சொத்துக்களை வேறு நபா்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீருடையில் வந்த ராணுவ வீரா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே சாலை விபத்தில் அண்ணன்- தம்பி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அண்ணன்- தம்பி உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டியைச் சோ்ந்த முகமது அலி மகன்கள் ஷேக் முகமது (38), ... மேலும் பார்க்க

கைதான பாஜக மாவட்டத் தலைவா் பிணையில் விடுவிப்பு

பழனியில் கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவா் கனகராஜ் பிணையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா். பழனியில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் நடைபெற்ற பாஜக பேரணியில் பங்கேற்பதற்காக மகளிரணியினா் வேனில் புறப்... மேலும் பார்க்க

பக்தா்களிடம் பணம் வசூல்: திருநங்கைகள் 3 போ் கைது

ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தா்களை தகாத வாா்த்தைகளால் பேசியும், அவா்களைத் தாக்கியும் பணம் வசூலித்ததாக திருநங்கைகள் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்... மேலும் பார்க்க