செய்திகள் :

"கேரளா ஒரு மினி பாகிஸ்தான்; ராகுலுக்குத் தீவிரவாதிகள் வாக்களித்தனர்..." - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

post image

மகாராஷ்டிராவில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.கவைச் சேர்ந்த நிதேஷ் ரானே. முதல் முறையாக அமைச்சராகி இருக்கும் நிதேஷ் ரானே சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருகிறார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் மகனான நிதேஷ் ரானே, புனே அருகில் உள்ள சஸ்வாட் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அப்சல் கானை சத்ரபதி சிவாஜி மகாராஜ் தோற்கடித்த தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் நிதேஷ் ரானே கலந்து கொண்டு பேசுகையில், "கேரளாவைச் சேர்ந்த இந்து ஆர்வலர்கள் 12 ஆயிரம் இந்துப் பெண்களைப் பாதுகாத்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

நிதேஷ் ரானே

கேரளா ஒரு மினி பாகிஸ்தான். அதனால் தான் ராகுல் காந்தியும், அவரது சகோதரியும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து தீவிரவாதிகளும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். தீவிரவாதிகளின் ஆதரவால்தான் இவர்கள் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற மத விழாக்களுக்குக் கொடுக்கப்படும் சுதந்திரம் இந்து மதத்திற்கும் கொடுக்கப்படவேண்டும்.

சட்டத்திற்குப் புறம்பாக யாரேனும் ஒருவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு தொலைப்பேசி அழைப்பு மூலம் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களுக்குக் காண்பிக்கும். இந்துத்துவா தொண்டர்கள் தனியாட்கள் கிடையாது. அவர்களுடன் அரசாங்கமாகிய நாங்கள் இருக்கிறோம்.

மகாராஷ்டிராவில் இந்துத்துவா முதல்வர் இருக்கிறார். எனவே நீங்கள் (இந்து ஆர்வலர்கள்) கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்'' என்றார்.

நிதேஷ் ரானேயின் செயல்பாடு குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அதுல் லோண்டே, வெறுப்பையும் ஆதாரமற்ற தகவலையும் பரப்புகிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

"செல்லூர் ராஜூ கூறியது ஆங்கிலப் புத்தாண்டின் மிகப்பெரிய ஜோக்" - துரை வைகோ விமர்சனம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“500 அரசு பள்ளிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக... மேலும் பார்க்க

பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை... முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!' – மருத்துவர் ராமதாஸ்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ... மேலும் பார்க்க

கழுகார்: `கடுப்பில் மாண்புமிகுவும் மக்கள் பிரதிநிதியும்’ டு `ஓடும் வேட்பாளர்கள்; திண்டாடும் அதிமுக’

அட்வைஸ் செய்த தலைமை… அடக்கி வாசிக்கும் ‘கிரீன்’ மாஜி!“இனி, பகைக்கக் கூடாது..!”சூரியோதய மாவட்ட இலைக் கட்சியில், சுந்தரமானவருக்கு டஃப் ஃபைட் கொடுத்துவந்தார் ‘கிரீன்’ மாஜி. சுந்தரமானவரின் நடவடிக்கைகள் ஒவ... மேலும் பார்க்க

'யாராக இருந்தாலும் கைதுசெய்ய வேண்டும்!' - அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் குறித்து திருமாவளவன் பேச்சு

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் ப... மேலும் பார்க்க

ட்ரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா கார்; ``தீவிரவாத நடவடிக்கையாக இருக்கலாம்" - எலான் மஸ்க்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் இருக்கிறது. நேற்று ஹோட்டல் நுழைவாயிலில் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான... மேலும் பார்க்க

`நாம் ஆண்ட பரம்பரை...' - அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை!

சமூகநீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தி.மு.க அரசில், வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ள பி.மூர்த்தி, சமுதாய விழா ஒன்றில் க... மேலும் பார்க்க