செய்திகள் :

"செல்லூர் ராஜூ கூறியது ஆங்கிலப் புத்தாண்டின் மிகப்பெரிய ஜோக்" - துரை வைகோ விமர்சனம்

post image
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“500 அரசு பள்ளிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 500 அரசு பள்ளிகளில் இருக்கும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார். ஒன்றிய அரசிடம் , அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியைக் கேட்டார்கள். ஆனால், ஒன்றிய அமைச்சர், `தேசிய கல்விகொள்கை ஏன் ஏற்க முடியாது என்று சொல்லுகிறீர்கள்' எனக் கேட்டார்.

துரை வைகோ
துரை வைகோ

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை தான் என்று கூறினோம். ஆனால், மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருதம் இருக்கவேண்டும் எனச் சொல்வது ஏன்? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை முழுமையாக வழங்க முடியும் எனத் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து கல்வித்துறைக்கு வழங்கவேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியுடன் இருக்கிறார். சிறப்பாகச் செயல்படுகிறார். திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் 97 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் 6 மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என விரும்புகிறேன்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பொங்கல் சிறப்பு தொகுப்பாக மக்களுக்கு ரூ.30,000 கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பதைப் பற்றிக் கேட்கிறீர்கள். செல்லூர் ராஜூ அப்படி கூறியது, ஆங்கிலப் புத்தாண்டின் மிகப்பெரிய ஜோக். இதனைப் பற்றி மேலும் பேச ஒன்றுமில்லை. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பா.ஜ.க-வுக்கு எந்த அருகதையும் கிடையாது. பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்தரபிரதேசம்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

டில்லியில் சட்டம் ஒழுங்கு, பா.ஜ.க கையில் உள்ளது. ஆனால், தலைநகரில் எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக, வாரத்துக்கு ஒரு துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. நாட்டின் தலைநகரத்திலேயே மக்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணா பல்கலைக்கழக சம்பவம் போல் இனிவரும் காலங்களில் நடக்காமல் தடுக்க, மாநில அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மாணவியின் புகாரில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு. இந்த விவகாரத்தில் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்” என்றார்

பொங்கல் பரிசுப்பணம்: "அன்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்று அவியல் செய்கிறாரா?" - ஆர்.பி.உதயகுமார்

"வடகிழக்குப் பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கூட வழங்காமல் பூஜ்ஜியத்தை வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்" என்று விமர்சித்துள்ளார் அ.த... மேலும் பார்க்க

”பேராவூரணி பேரூராட்சியில் ஊழல், வழக்கு தொடர்ந்த திமுக ஒப்பந்தராரர்”- ஆர்.காமராஜ்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அதிமுக சார்பில் பேராவூரணி வ... மேலும் பார்க்க

பெண்களை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்; எல்லாமே அரசு செய்யமுடியாது - மதுரை ஆதீனம்

"ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்கும் போலீஸ் போட்டால், போலீசால் அந்த வேலை மட்டும்தான் பார்க்க வேண்டி வரும்" என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனம் (ஃபைல் படம்)மதுரையில் நட... மேலும் பார்க்க

தமிழிசை டெல்லி விசிட்.. போராடும் அண்ணாமலை... பரபரக்கும் பாஜக முகாம்!

பா.ஜ.க-வில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையைக் கடந்த 2.9.20... மேலும் பார்க்க

`பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கிறோம்’ – வானதி சீனிவாசன்

புதுச்சேரி பா.ஜ.க-வின் நிர்வாக அமைப்புத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அம... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே பொறுப்பு" - ராமதாஸ்

விக்கிரவாண்டியில் தனியார்ப் பள்ளியொன்றில், திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் மூன்றரை வயது தவறி விழுந்து பலியான சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறிய... மேலும் பார்க்க