செய்திகள் :

மாணவி வன்கொடுமை: "யார் அந்த சார்? என்ற விவரம் தெரிந்தால் ஆட்சி ஆட்டம் காணும்" - கடம்பூர் ராஜூ ஆவேசம்

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க வடக்கு மாவட்டம் சார்பாக தி.மு.க அரசைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”முந்தைய 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது 520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதில் பத்து சதவீத தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

செய்தியாளர்கள் சந்திப்பில் கடம்பூர் ராஜூ

இந்த தி.மு.க ஆட்சி கடனாளியான ஆட்சியாக உள்ளது. அத்துடன் இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக உள்ளது. மாணவர்களுக்குப் பாதுகாப்பில்லை. காதலிக்க மறுத்த மாணவி குத்தி கொலை செய்யப்படுகிறாள். ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பில்லை. பள்ளிக்குள்ளேயே சென்று குத்தி கொலை செய்யப்படுகிறார். மருத்துவர்களுக்கும் பாதுகாப்பில்லை. மருத்துவமனைக்குள்ளே சென்று தாக்கப்படுகிறார்கள். காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை. வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பில்லை.

இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லாத நிலையே நிலவுகிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதுதான். பத்திரிக்கையில் பார்த்தால் தினம்தோறும் கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்த செய்திகளைத்தான் பார்க்க முடிகிறது. இந்த நிலையில்தான் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் ஹிட்லர் சர்வாதிகாரி போலச் செயல்படுகிறார். பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ”யார் அந்த சார்?” என்ற விவகாரம் வெளியே வந்தால் இந்த ஆட்சி ஆட்டம் காண்கிற நிலை உருவாகும். ஆனால், பயத்தில் இதை மூடி மறைக்கிறார்கள். உயர்நீதிமன்றமே இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் ரகசியமாக இருக்க வேண்டிய எப்.ஐ.ஆரை கசிய விட்டது இந்த அரசு. எப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி? இதற்கெல்லாம்  விளக்கம் சொல்லாமல் தமிழக முதல்வர் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார்.” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

"செல்லூர் ராஜூ கூறியது ஆங்கிலப் புத்தாண்டின் மிகப்பெரிய ஜோக்" - துரை வைகோ விமர்சனம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“500 அரசு பள்ளிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக... மேலும் பார்க்க

பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை... முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!' – மருத்துவர் ராமதாஸ்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ... மேலும் பார்க்க

கழுகார்: `கடுப்பில் மாண்புமிகுவும் மக்கள் பிரதிநிதியும்’ டு `ஓடும் வேட்பாளர்கள்; திண்டாடும் அதிமுக’

அட்வைஸ் செய்த தலைமை… அடக்கி வாசிக்கும் ‘கிரீன்’ மாஜி!“இனி, பகைக்கக் கூடாது..!”சூரியோதய மாவட்ட இலைக் கட்சியில், சுந்தரமானவருக்கு டஃப் ஃபைட் கொடுத்துவந்தார் ‘கிரீன்’ மாஜி. சுந்தரமானவரின் நடவடிக்கைகள் ஒவ... மேலும் பார்க்க

'யாராக இருந்தாலும் கைதுசெய்ய வேண்டும்!' - அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் குறித்து திருமாவளவன் பேச்சு

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் ப... மேலும் பார்க்க

ட்ரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா கார்; ``தீவிரவாத நடவடிக்கையாக இருக்கலாம்" - எலான் மஸ்க்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் இருக்கிறது. நேற்று ஹோட்டல் நுழைவாயிலில் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான... மேலும் பார்க்க

`நாம் ஆண்ட பரம்பரை...' - அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை!

சமூகநீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தி.மு.க அரசில், வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ள பி.மூர்த்தி, சமுதாய விழா ஒன்றில் க... மேலும் பார்க்க