செய்திகள் :

வாக்காளர் அட்டை பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்!

post image

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த 18 வயது இளம் பெண் ராதா, தில்லி தேர்தலையொட்டி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார்.

தேர்தல் என்ற ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதற்கான கடமை என்பதோடு மட்டுமின்றி, தனது சொந்த நாடு என்று கூறுவதற்கும், குரல் கொடுப்பதற்குமான உரிமையாக வாக்காளர் அடையாள அட்டை மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 300 பேர் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளர் அடையாள அட்டைக் கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த 300 பேரில் ஒருவர் ராதா.

பாகிஸ்தானில் இருந்து 4 வயது இருக்கும்போது தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது 18 வயது பூர்த்தி அடைந்ததால், வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ன் படி இவர்களுக்கு கடந்த மே மாதம் நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமை வழங்கப்பட்டது.

வாக்காளர் அட்டை கிடைத்தது குறித்து ராதா பேசியதாவது,

’’என் குடியுரிமைச் சான்றிதழை இந்த ஆண்டு பெற்றேன். சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கும் விண்ணப்பித்திருந்தேன். இந்திய குடிமகளாக வாக்களிக்க உள்ளது இதுவே முதல்முறை. எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் எங்களை இங்கே தங்க அனுமதிப்பார்கள் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டார்.

உள்ளூர் பிரச்னைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராதா, இங்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. அதிக வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என நினைக்கிறேன்.

பாகிஸ்தானில் விவசாய வேலைதான் செய்துவந்தோம். பின்னர் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தோம். இங்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் விவசாயம் செய்ய நிலம் இல்லை. யமுனா நதியோரம் குத்தகைக்கு அரசு நிலம் ஒதுக்கினால், அதில் விவசாயம் செய்து எங்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வோம்’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பாஜகவுக்கு என்ன? ராகுலின் வியத்நாம் பயணம் குறித்து காங்கிரஸ் கேள்வி!

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் பெயர்: மோடிக்கு கடிதம்!

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய மாணவர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.தில்லி பல்கலைக்கழகத்துக்கு கட்... மேலும் பார்க்க

தில்லியில் மேம்பாலத்தைத் திறந்துவைத்தார் அதிஷி!

மேற்கு தில்லியில் ஆறு வழி பஞ்சாபி பாக் மேம்பாலத்தை அந்த மாநிலத்தின் முதல்வர் அதிஷி இன்று திறந்துவைத்தார். மேம்பாலத்தை திறந்துவைத்தபின் அதிஷி கூறியதாவது, பஞ்சாபி பாக் மேம்பாலத்தின் நீளம் 1.12 கி.மீ ஆகு... மேலும் பார்க்க

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு பாஜகதான் பொறுப்பு: ஆம் ஆத்மி

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பாஜகதான் பொறுப்பு என... மேலும் பார்க்க

ரூ.5,000 வரவு வைக்கப்படும்.. பிரதமர் மோடி படத்துடன் மோசடி லிங்க்! மக்களே உஷார்!!

பாஜகவினர் அனுப்பியது போல பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் ஒரு லிங்க், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையல்ல, அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் வங்கிக் கணக்கிலிருக்கும் பணம் மோசடி செய்... மேலும் பார்க்க

'ஓராண்டு போதும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்போம் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மைய... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் ஜகதீப் தன்கர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். புத்தாண்டையொட்டி கட்சியின் நிர்வாகிகள் பலரும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து ... மேலும் பார்க்க