தில்லியில் மேம்பாலத்தைத் திறந்துவைத்தார் அதிஷி!
மேற்கு தில்லியில் ஆறு வழி பஞ்சாபி பாக் மேம்பாலத்தை அந்த மாநிலத்தின் முதல்வர் அதிஷி இன்று திறந்துவைத்தார்.
மேம்பாலத்தை திறந்துவைத்தபின் அதிஷி கூறியதாவது,
பஞ்சாபி பாக் மேம்பாலத்தின் நீளம் 1.12 கி.மீ ஆகும். இந்த மேம்பாலத்தினால் தினமும் 3.45 லட்சம் பேர் பயனடைவார்கள். மேம்பாலம் திறக்கப்பட்டதனால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தில்லி மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், மேம்பாலத்தினால் 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படும். பஞ்சாபி பாக் மேம்பாலம் கடந்த பத்து ஆண்டுகளில் 39-வது மேம்பாலம் ஆகும்.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் 25-ஆம் தேதி, நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள அப்சரா எல்லையை ஆனந்த் விஹாரை இணைக்கும் ஆறு வழி மேம்பாலத்தை அதிஷி திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்தால் தினமும் சுமார் 1.5 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.