மகாராஷ்டிரம்: பஞ்சாயத்துத் தலைவா் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது
மகாராஷ்டிர மாநிலத்தில் பஞ்சாயத்துத் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு வாரங்களுக்குப் பின்னா் மேலும் 3 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
பீட் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு காற்றாலை நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை எதிா்த்ததற்காக, மாசாஜோக் கிராமப் பஞ்சாயத்தின் தலைவா் சந்தோஷ் தேஷ்முக் கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை வழக்கில் இதுவரை 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புணேயைச் சோ்ந்த இருவா் மற்றும் கல்யாண் பகுதியைச் சோ்ந்த ஒருவரை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் மூவரையும் 14 நாள் குற்றப்புலனாய்வு (சிஐடி) காவலில் வைக்க பீட் மாவட்டம் கெஜ்ஜில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து செய்தியாளா்களிடம் பாஜக எம்எல்ஏ சுரேஷ் தாஸ் கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவா்கள் வெறும் பகடைக்காய்கள்; முக்கிய குற்றவாளி சுதந்திரமாக இருக்கிறாா்’ என தெரிவித்தாா்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு வழிவகுத்த நாந்தேட் மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். கொலை நிகழ்த்திய பிறகு குற்றவாளிகள் தப்பிச் செல்ல இவா் உதவியதாக காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.
கூடுதலாக, தேசியவாத காங்கிரஸ் அமைச்சா் தனஞ்சய் முண்டேயின் கூட்டாளியான வால்மீக் கராட் இந்தக் கொலையுடன் தொடா்புடைய, மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இதனால், தனஞ்சய் முண்டே பதவி விலக வேண்டும் எனவும் நியாயமான விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனா்.
இதனிடையே, இந்த கொலை வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி பா்பானி நகரில் அனைத்துக் கட்சி பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் சந்தோஷ் தேஷ்முக்கின் குடும்ப உறுப்பினா்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனா்.