செய்திகள் :

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

post image

2023-2024-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு  மிகை ஊதியம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ. 163.81 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  உத்தரவிட்டுள்ளார்கள். 

இதையும் படிக்க: நடிகர் எஸ்.வி. சேகரின் சிறைத்தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்

இந்த உத்தரவின்படி, 

1) ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். 

2) தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் 2023-2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.   

3) "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

மியான்மரில் சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜன.4) தெரிவித்துள்ளனர்.கிழக்கு மியான்மரின் ஷன் மாநிலத்தில் போதைப் பொருள் த... மேலும் பார்க்க

பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஹென்ரிக்கோ டாக்டர்ஸ் மருத்துவமனையில் 3 பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் அந்த மருத்த... மேலும் பார்க்க

ஈக்வடார் நாட்டில் அவசரநிலை பிரகடனம்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டு மோதல்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவமும... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினரால் சுட்டுக்கொலை!

பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.பிகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆயுதம் ஏந்திய கொள்ளைப் போன்ற... மேலும் பார்க்க

முக சீரமைப்பு சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமிக்கு வீடு: முதல்வர் வழங்கினார்

சென்னை: அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் வெடிவிபத்து! ஒருவர் பலி!

தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் ஒருவர் பலியாகியுள்ளார். அம்மாநிலத்தின் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு... மேலும் பார்க்க