செய்திகள் :

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் - நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

post image
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்கு வழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இந்த நெடுஞ்சாலையில் (179A) ஆம்பூர்,வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் நிலையில் விபத்துகள் தொடர்ந்து நேர்ந்து வருகிறது. முக்கியமாக வாகனங்கள் செல்லும் இடத்தில் இரண்டு பக்கமும் ரெட்டியூர், சின்னகம்மியம்பட்டு,குன்டிமாரியம்மன் வட்டம், காந்தி நகர் போன்ற வெவ்வேறு ஊர்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகளைத் தாண்டி பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் காணப்படும்.

சாலை
சாலை

காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் இங்கு நின்றுதான் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்தப்போது,'நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் மிகவும் வேகமாக வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்காமல் பல முறை திக்குமுக்காடுகின்றோம்.

இதனால் பல முறை விபத்துகள் நேர்ந்து வருகிறது. அண்மையில் கூட ஸ்கூட்டியில் பெண் ஒருவர் சாலையைக் கடக்கும்போது நான்கு சக்கர வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதுபோன்று இங்கு இரண்டு வருடங்களில் பல அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்விடத்தில் ஒரு பேரிகார்டு இருந்திருந்தால் இது போன்று நடந்திருக்காது' என்று வேதனையுடன் கூறினர்.

இது குறித்து அந்த ரெட்டியூர் பஞ்சாயத்துத் தலைவர் மூர்த்தியிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினோம் "ஆமாம், சாலையில் விபத்துகள் அதிகளவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் உயர் அதிகாரிகளுக்கு இந்த சூழலைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் விரைந்து நடவடிக்கை வழிவகை செய்கிறோம்" என்று கூறினார்.

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 தொழிலாளர்கள் பலி

வச்சக்காரப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.மீட்புப் பணி அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூரை அடுத்த பொம்மையாபுர... மேலும் பார்க்க

Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; என்ன‌ நடந்தது?

நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறைபனி காலம் என்பதால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் தாங்க முடியாத அளவிற்குக் குளிர் நடுங்க வைக்கிறது. வெம்மை... மேலும் பார்க்க

Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த சோகம்!

வனங்கள் நிறைந்திருந்த நீலகிரியில் தனியார் மற்றும் அரசு மூலம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சி பணிகளின் காரணமாக வனங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. வாழிடங்களையும் வழித்தடங்களைய... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் தீ விபத்து; உயிர்தப்பிய நோயாளிகள்... நள்ளிரவில் பரபரப்பு!

ராமநாதபுரம் நகர் பகுதியில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. 5 தளங்களுடன் பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்பட்டு... மேலும் பார்க்க

லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்; பறிபோன 3 உயிர்கள் - ராமநாதபுரத்தில் கோர விபத்து!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் வரிசைகனி (65). இவருக்கு நேற்று நள்ளிரவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து த.மு.மு.க அமைப்பினை சேர்ந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப... மேலும் பார்க்க

``நான் ஏன் இங்கே இருக்கிறேன்?'' - விமான விபத்தில் தப்பிய 2 பேர்... 175 பேர் பலி -தென் கொரியா சோகம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஜெஜு ஏர் விமானம் 7C2216, 175 பயணிகள், 6 பணியாளர்களுடன் தென் கொரியாவை நோக்கிப் புறப்பட்டது. தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையமான முவான் விமான நிலையத்தில் நேற்று ... மேலும் பார்க்க