செய்திகள் :

``நான் ஏன் இங்கே இருக்கிறேன்?'' - விமான விபத்தில் தப்பிய 2 பேர்... 175 பேர் பலி -தென் கொரியா சோகம்

post image

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஜெஜு ஏர் விமானம் 7C2216, 175 பயணிகள், 6 பணியாளர்களுடன் தென் கொரியாவை நோக்கிப் புறப்பட்டது. தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையமான முவான் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிக் கொண்டிருந்தபோது பறவை மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைத் தடுமாறிய விமானம், கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி தீப்பிடித்து, வெடித்து சிதறியது. இதில், பயணிகள் 175 பேரும், பணியாளர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரண்டு பணியாளர்கள் மட்டும் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

ஜெஜு ஏர் விமானம் 7C2216

இது தொடர்பாக பேசிய முவான் நிலைய தீயணைப்புத் துறைத் தலைவர் லீ ஜங்-ஹியூன், ``பயணிகளுக்கு உதவுவதற்காக விமானத்தின் வால் பகுதியில் இருக்கவைக்கப்பட்ட இரண்டு பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உடலின் சில இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. எனவே, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது." என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்து மருத்துவர்களிடம் விசாரிக்கப்பட்டது.

மருத்துவர்கள், ``ஒருவர் 32 வயதான லீ. அவருக்கு நினைவு திரும்பியவுடன்... என்ன ஆனது? நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எனத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவர் விமானம் தரையிறங்கும்போது, இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்தது வரைதான் அவருக்கு நினைவு இருக்கிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியவில்லை. இடது தோள்பட்டை மற்றும் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

ஜெஜு ஏர் விமானம் 7C2216

மற்றொருவர் குவான். 25 வயதான அவருக்கும் விபத்துக் குறித்து எதுவும் நினைவில் இல்லை. தலை, கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. வயிற்றுப் பகுதியில் அதிக வலியை உணர்வதாக கூறினார். அதற்கான பரிசோதனைகள் செய்யப்படுகிறது" என்றனர்.

``1997-ம் ஆண்டு குவாமில் ஏற்பட்ட கொரிய விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, ஏற்பட்ட மோசமான விபத்து இதுதான்" என போக்குவரத்து அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த விமான விபத்து தென் கொரியாவை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கீழே விழுந்த பயணியை மீட்கப் பின்னோக்கி ஓடிய ரயில்; சக பயணிகளின் போராட்டத்தையும் மீறி நடந்த சோகம்

மும்பையில் ஒவ்வொரு நாளும் புறநகர் ரயிலிலிருந்து கீழே விழுந்து 5க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து புனே நோக்கி தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந... மேலும் பார்க்க

நல்லபாம்பு கடித்து மரணமடைந்த பாம்புபிடி வீரர்; ``குடும்பத்துக்கு அரசு உதவி..'' -மக்கள் கோரிக்கை!

கேரள மாநிலத்தில் பாம்புபிடி வீரர்கள் அதிகமாக உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக பாம்புபிடி வீரர்களை தொடர்புகொண்டு உதவி கேட்கின்றனர். பாம்புபிடி வீரர்கள் பாம்பை பிடித... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 தொழிலாளர்கள் பலி

வச்சக்காரப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.மீட்புப் பணி அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூரை அடுத்த பொம்மையாபுர... மேலும் பார்க்க

Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; என்ன‌ நடந்தது?

நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறைபனி காலம் என்பதால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் தாங்க முடியாத அளவிற்குக் குளிர் நடுங்க வைக்கிறது. வெம்மை... மேலும் பார்க்க

Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த சோகம்!

வனங்கள் நிறைந்திருந்த நீலகிரியில் தனியார் மற்றும் அரசு மூலம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சி பணிகளின் காரணமாக வனங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. வாழிடங்களையும் வழித்தடங்களைய... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் - நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்கு வழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.இந்த நெடுஞ்சாலையில் (179A) ஆம்பூர்,வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டி... மேலும் பார்க்க