செய்திகள் :

ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் தீ விபத்து; உயிர்தப்பிய நோயாளிகள்... நள்ளிரவில் பரபரப்பு!

post image

ராமநாதபுரம் நகர் பகுதியில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. 5 தளங்களுடன் பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் இங்கு 500 படுக்கை வசதி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 350 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, மின்சார வயர்கள் எரிந்து புகை வெளியானது. நேரம் செல்ல செல்ல புகையின் தாக்கம் அதிகரிக்கவே அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மின் விபத்திற்கு காரணமான இன்வெட்டர்கள்

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீ விபத்து நிகழ்ந்த 2 வது தளத்திற்கு சென்று தீ அணைப்பு பணியை மேற்கொண்டனர். மருத்துவமனையில் தீ விபத்து நிகழ்ந்த செய்தி அறிந்த சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் டார்ச் லைட் மற்றும் அவசர விளக்குகளை பயன்படுத்தி இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மீட்டு அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சர் மூலமும் தோள்களில் தூக்கிக் கொண்டும் முதல் தளத்துக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்டவர்களில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த ஒரு சில நோயாளிகள் முதல் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்தின் போது மீட்கப்பட்ட நோயாளிகள்
தீ விபத்தின் போது மீட்கப்பட்ட உள் நோயாளிகள்
மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆய்வு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த தீ விபத்து குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு உடனடியாக வருகை தந்தனர். தீ விபத்து ஏற்பட்ட இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறை மற்றும் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள அறைகளை பார்வையிட்ட அவர்கள், நோயாளிகளின் உறவினர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

நள்ளிரவில் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த இந்த தீ விபத்தினை தொடர்ந்து, அங்கு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் உறவினர்கள் அதிக அளவில் திரண்டதால் இரவு முழுவதும் பரபரப்பு நிலவியது.

கீழே விழுந்த பயணியை மீட்கப் பின்னோக்கி ஓடிய ரயில்; சக பயணிகளின் போராட்டத்தையும் மீறி நடந்த சோகம்

மும்பையில் ஒவ்வொரு நாளும் புறநகர் ரயிலிலிருந்து கீழே விழுந்து 5க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து புனே நோக்கி தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந... மேலும் பார்க்க

நல்லபாம்பு கடித்து மரணமடைந்த பாம்புபிடி வீரர்; ``குடும்பத்துக்கு அரசு உதவி..'' -மக்கள் கோரிக்கை!

கேரள மாநிலத்தில் பாம்புபிடி வீரர்கள் அதிகமாக உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக பாம்புபிடி வீரர்களை தொடர்புகொண்டு உதவி கேட்கின்றனர். பாம்புபிடி வீரர்கள் பாம்பை பிடித... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 தொழிலாளர்கள் பலி

வச்சக்காரப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.மீட்புப் பணி அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூரை அடுத்த பொம்மையாபுர... மேலும் பார்க்க

Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; என்ன‌ நடந்தது?

நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறைபனி காலம் என்பதால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் தாங்க முடியாத அளவிற்குக் குளிர் நடுங்க வைக்கிறது. வெம்மை... மேலும் பார்க்க

Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த சோகம்!

வனங்கள் நிறைந்திருந்த நீலகிரியில் தனியார் மற்றும் அரசு மூலம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சி பணிகளின் காரணமாக வனங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. வாழிடங்களையும் வழித்தடங்களைய... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள் - நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே, நான்கு வழிச் சாலை அமைத்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.இந்த நெடுஞ்சாலையில் (179A) ஆம்பூர்,வேலூர், சென்னை செல்ல வாகன ஓட்டி... மேலும் பார்க்க