விஜய் - 69 அப்டேட் இல்லையா? ரசிகர்கள் ஏமாற்றம்!
நடிகர் விஜய் நடித்துவரும் அவரது 69-வது படத்தின் அப்டேட் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கவர்ந்த அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சி!
இந்த நிலையில், இப்படத்தை தயாரித்துவரும் கேவிஎன் புரட்கஷ்ன்ஸ் நிறுவனம், நேற்று (ஜன. 1) புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஜன. 2 ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள் எனத் தெரிவித்திருந்தது.
இது, விஜய் - 69 படத்தின் அப்டேட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக கேவிஎன் தெரிவித்துள்ளது.
இதனால், விஜய் ரசிகர்கள் புத்தாண்டு அன்று தளபதி - 69 அப்டேட் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.