சீனாவில் பரவும் புதிய தீநுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டாம் -தமிழக பொது சுகாதாரத் ...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முக்கியத்துவம் என்ன? ஷேன் வாட்சன் விளக்கம்!
2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் ஆஸி. வீரரும் ஐசிசியின் தூதுவருமான ஷேன் வாட்சன் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறும் அட்டவணை குறித்து டிச.2024இல் அறிவித்தது. இதில் இந்தியாவை தவிர மற்ற அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதிப்போட்டியானது துபையில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐசிசி தூதரான வாட்சன் (43) கூறியதாவது:
சாம்பியன்ஸ் டிராபியின் அழகு
விளையாடும் நோகத்தில் சொல்லவேண்டுமானால் சாம்பியன்ஸ் டிராபி சிறப்பான ஒரு தொடர். ஆண்டு முழுவதும் இருதரப்பு தொடர்களில் விளையாடுவது சற்று சலித்து போகலாம். அது ரசிகர்களுக்கும் சலிப்படைய வைக்கும்.
சாம்பியன்ஸ் டிராபியில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. ஒரு அணியாக நீங்கள் ஆடுகளத்தின் அனைத்து பக்கங்களிலும் குறைவான நேரத்தில் அதிகமாக ஓட வேண்டும். இல்லையெனில் 2013இல் ஆஸ்திரேலிய அணி போல வெளியேற்றப்படுவீர்கள்.
இந்த சாம்பியன்ஸ் டிராபியின் அழகே 8 அணிகள் மட்டுமே பங்கேற்கும். உலகக் கோப்பையில் சிறிய அணிகளும் பங்கேற்கும். ஆனால், இதில் உள்ள எல்லா அணிகளும் அனுபவம் வாய்ந்தவை. முதல் போட்டியில் இருந்தே நீங்கள் உங்களது சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விருந்து
அனைத்து பந்துகளுக்குமே முக்கியத்துவம் உள்ளதால் ஒவ்வொரு போட்டியும் அதிக மதிப்பு மிக்கதாக இருக்கும். அது எனக்கு பிடிக்கும்.
பாகிஸ்தானில் நடைபெறுவதால் அதன் ரசிகர்களுக்கு மிகுந்த சாதகமாக இருக்கும். உலக தரத்திலான கிரிக்கெட்டினை சொந்த நாட்டில் அனுபவிக்கலாம். நானும் அதேபோல் ஒரு சிறிய அனுபவத்தை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும்போது உணர்ந்தேன்.
முதலில் 2005இல். பின்னர் 2019இல் அந்த அனுபவத்தை அனுபவித்தேன். அவை எல்லாமே எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான கால்கட்டங்கள். நிறைய நாட்களுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தான் செல்கிறேன்.
நேரலையாக உலகத் தரத்திலான கிரிக்கெட்டினை பாகிஸ்தான் மக்கள் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள். ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் அந்த நாடே ஒளிறவிருக்கிறது என்றார்.