செய்திகள் :

சிட்னி திடலில் இந்தியாவின் சாதனைகள் என்ன?

post image

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி திடலில் நாளை(ஜன.3) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் இருக்கிறது.

இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது.

2014-2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணி பார்டர்- கவாஸ்கர் தொடரை வெல்லுவதற்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.

இதையும் படிக்க |ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் ஆச்சரியமில்லை: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்

அதை பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் வென்று காட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சரிவுகளைச் சந்தித்து வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இதனால், சிட்னி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இருப்பினும், சிட்னி மைதானத்தில் இந்திய அணியின் சாதனைகள் மிகவும் மோசமாகவே இருக்கின்றன.

இதுவரை சிட்னி மைதானத்தில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் 7 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

இதையும் படிக்க |வெற்றி பெறும் எண்ணத்தில் மாற்றமில்லை: பாட் கம்மின்ஸ்

இவ்விரு அணிகளும் முதன் முறையாக 1948 ஆம் ஆண்டு மோதிக்கொண்டன. இந்தப் போட்டி மழையால் சமனில் முடிந்தது. இந்தியா ஒரேயொரு முறை மட்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 1978 ஆம் ஆண்டு நடந்தப் போட்டி எடப்பள்ளி பிரசன்னா 8 விக்கெட்டுகள் வீழ்த்திய அந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் ஒரு வெற்றிகூட பெறவில்லை.

கடைசியாக இந்தியா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இறுதியாக 2020-2021 ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் புஜாரா மற்றும் அஸ்வின் - ஹனுமா விஹாரி ஆகியோரின் நிதான ஆட்டத்தால் டிராவில் முடிந்தது. அதற்கு முன்னதாக, 2019 ஆம் ஆண்டு போட்டி புஜாராவில் 193 ரன்கள் விளாசிய போதிலும், மழையால் போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதுவரை சிட்னி மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 785 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி 157 ரன்களாகும். பந்துவீச்சில் அனில் கும்ப்ளே 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சிட்னியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 705/7 ரன்களாகும். அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்களும் விவிஎஸ் லக்‌ஷ்மண் 178 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ரோஹித் நீக்கப்பட்டாரா? ஓய்வறை விவாதம் குறித்து பேச மறுத்த கம்பீர்!

பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையி... மேலும் பார்க்க

ஒருவர் இரட்டை சதம், இருவர் சதம் விளாசல்; தென்னாப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ... மேலும் பார்க்க

பிசிசிஐ செயலராக பொறுப்பேற்கவுள்ள தேவஜித் சாய்கியா!

பிசிசிஐ-யின் புதிய செயலராக தேவஜித் சாய்கியா பொறுப்பேற்கவுள்ளார்.பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பிசிசிஐ-ன் அடுத... மேலும் பார்க்க

முதல் பந்திலிருந்து ஆஸி.யை திணறடித்த ரிஷப் பந்த்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவா... மேலும் பார்க்க

வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!

வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூபுக்கு காயம் ஏற்பட்டது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் ... மேலும் பார்க்க