பாக். டெஸ்ட்: 18 வயது வீரருக்கு தெ.ஆப்பிரிக்க அணியில் வாய்ப்பு!
10 ஆண்டுகளில் 31 கொலைகள்; பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடா இந்தியா? புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?
2015 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 24, 2024 வரை உலகம் முழுவதும் 757 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாவலர் குழு (Committee to Protect Journalists - CPJ) கூறியுள்ளது. CPJ அறிக்கையின் படி, 2024ல் மட்டும் 98 பத்திரிகையாளர்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக 2015 ஆம் ஆண்டு 100 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2023, 24 ஆம் ஆண்டுகளில் 98 பேர் கொல்லப்பட்டனர் (பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியளாலர்கள்).
குறிவைக்கப்படும் பாலஸ்தீன் பத்திரிகையாளர்கள்!
2024 ஆம் ஆண்டு உயிரிழந்தோரில் 60 விழுக்காடு பத்திரிகையாளர்கள் பாலஸ்தீன் பகுதியில் உயிரிழந்துள்ளனர். இது 2023 இல் 73 விழுக்காடாக இருந்தது.
இந்த தரவுகளின் அடிப்படையில் 20 நாடுகள் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பற்றதாகக் கூறப்படுகின்றன. இந்த நாடுகளிலிருந்து மட்டுமே 647 பேர் (85%) கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் பிராந்தியத்தில் 139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 135 பேர் 2023, 24 ஆம் ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள். 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல், பாலஸ்தீன் இடையிலான போர் தொடங்கியது. அன்றுமுதல் உயிரிழந்தவர்களில் 133 பேர் பாலஸ்தீனியர்கள், 2 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள். போர் தொடங்கிய பிறகு லெபனானில் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
7வது இடத்தில் இந்தியா!
2015 முதல் 2024 வரை, 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ள இந்தியா, பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் 7வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் எல்லைப்புறங்களில் இந்த ஆண்டுகளில் போர்கள் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...