செய்திகள் :

New Orleons Attack: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்...15 பேர் உயிரிழப்பு! - என்ன நடந்தது?

post image

அமெரிக்காவின் லூசியானாவில் அமைந்திருக்கிறது நியூ ஆர்லியன்ஸ் நகரம். அங்கே உள்ள பிரெஞ்ச் குவாட்ரஸ் பகுதியில் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு, புத்தாண்டு கொண்டாடுவதற்காக கூடியிருந்த கூட்டத்திற்குள் ஒருவர் பிக் அப் டிரக்கை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கிட்டத்தட்ட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் அரசு தரவுகள் கூறுகின்றன.

5 பேர் உயிரிழப்பு!

இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டிரக்கில் ஐ.எஸ் கொடி பறக்கவிடப்பட்டிருந்திருக்கிறது. தற்போது நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் சம்சுதீன் ஜாபர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலுக்கு காரணமான இந்த நபரை அங்கிருந்த போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

42 வயதான ஜாபர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். 2006-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த இவர், 2009-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு நாடு பெயர்ந்துள்ளார். அங்கே கிளர்க் ஆக பணியாற்றி வந்துள்ளார்.

மீண்டும் 2015-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகியுள்ளார்.

இவருடைய குற்றப்பின்னணி என்று பார்த்தால், 2002-ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கிலும், 2005-ம் ஆண்டு செல்லாத ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூ ஆர்லியான்ஸில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னால், ஜாபர் பல வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அதை ஆய்வு செய்து வரும் அமெரிக்க போலீஸ் அமைப்பான எஃப்.பி.ஐ, அந்த வீடியோவில் ஜாபர் தாக்குதல் குறித்து பேசியிருப்பதாக கூறியுள்ளது. மேலும், சமீபத்தில் ஆன விவாகரத்தால் மனம் உடைந்து போயிருந்த ஜாபர், தாக்குதல் இடத்தில் நடந்த கொண்டாட்டத்தில் அவரது முன்னாள் குடும்ப உறுப்பினர்களையும் கலந்துகொள்ள வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், ஏதோ காரணங்களால், இந்த முயற்சியை கைவிட்டுள்ளார்.

ஜாபரின் வீடியோ பதிவுகளை எஃப்.பி.ஐ தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அந்த வீடியோக்கள் ஒன்றில், ஜாபர் தான் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக பேசியுள்ளார்.

பின்னணி என்ன?!

ஜாபர் குறித்து இதுவரை வெளிவந்த தகவல்களின் படி, அவர் கடந்த சில ஆண்டுகளாகவே நிதி நெருக்கடியில் சிக்கி வந்துள்ளார். அவரது பிசினஸும் சரியாக போகவில்லை. இதனால், கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஜாபர் மட்டுமல்லாமல், வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது எஃப்.பி.ஐ.

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்... பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துஷார் பிஷ்ட், பிரேசில... மேலும் பார்க்க

Chhattisgarh: முறைகேடுகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக கண்டெடுப்பு - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலத்தில், உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் ஜனவரி 3-ம் தேதி பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சுரேஷ் சந்தி... மேலும் பார்க்க

Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்திய மாணவி

ஞானசேகரன் போனில் பேசியதை சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி கூறியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமி... மேலும் பார்க்க

விருதுநகரில் போலி சுங்கத்துறை அதிகாரி கைது- மோசடிக்கு வலையா? போலீஸ் விசாரணை

விருதுநகர் தனியார் லாட்ஜில் சுங்கத்துறை அதிகாரி என பொய் சொல்லி ரூம் எடுத்து தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் புல்லலக்க... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை’ - உறவினர்கள் எழுப்பும் கேள்விகள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் இவர், தன்னுடைய மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமியை விக்கிரவாண்டியி... மேலும் பார்க்க

`பல கோடி ரூபாய் முறைகேடு' - மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், பல கோடி ரூபாய் மோசடிப்புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மத்திய சிறையில், கடந்த 201... மேலும் பார்க்க