சீனாவில் பரவும் புதிய தீநுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டாம் -தமிழக பொது சுகாதாரத் ...
சென்னை: திருமணத்தை மீறிய நட்பு; காவல் நிலைய வாசலில் தீக்குளித்த டான்ஸர்
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ராணி (35) (பெயர் மாற்றம்). இவர், கிளப் ஒன்றில் டான்ஸராக இருந்து வருகிறார். இவருக்கும் வடபழனியைச் சேர்ந்த அறிவழகனுக்கும் (34) இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணமாகிய நிலையில் ராணியும் அறிவழகனும் திருமணத்தை மீறிய நட்பில் இருந்ததாக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அறிவழகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராணி கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதற்கு அறிவழகன் மறுத்துவிட்டார். அதனால் அறிவழகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடபழனி காவல் நிலையத்துக்கு ராணி சென்றார். அப்போது அவரை விசாரித்த போலீஸார், இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி தெரிவித்தனர்.
இதையடுத்து ராணி, அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் செல்லாமல் காவல் நிலையத்திலிருந்து வெளியில் வந்திருக்கிறார். பின்னர் பைக்கிலிருந்து பெட்ரோலை எடுத்த ராணி, அதை தன் மீது ஊற்றி தீ வைத்தார். காவல் நிலைய வாசலில் ராணி தீயில் கருகியதைப் பார்த்த போலீஸார் உடனடியாக தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்தனர். உடனடியாக ராணியை போலீஸார் மீட்டதால் அவர் உயிர்தப்பினார். அதைத் தொடர்ந்து ராணியின் கணவருக்கு தகவல் தெரிவித்த போலீஸார், அவருடன் ராணியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.