விடுதலை - 2 முதல் நாள் வசூல்!
விடுதலை - 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.
படமும் பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்!
இந்த நிலையில், விடுதலை - 2 திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 7.5 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு பாகங்களும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் வணிக வெற்றிக்காகத் தயாரிப்பு நிறுவனம் காத்திருக்கிறது.