ரோஹித் சர்மா, விராட் கோலியின் பங்களிப்பு இல்லை; முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மூத்த வீரர்கள் அணிக்காக தங்களது பங்களிப்பை வழங்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை: இரு அணிகளின் கேப்டன்களும் பேசியது என்ன?
இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறினர். மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அணிக்கு தங்களது பங்களிப்பை வழங்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் செயல்பாடுகள் இந்திய அணியைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவின் அடிப்படையிலேயே அமைகிறது. இந்திய அணியின் மூத்த வீரர்களிடமிருந்து எதிர்பார்த்த பங்களிப்புகள் அணிக்கு கிடைக்கவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணிக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். டார் ஆர்டர் சரியான பங்களிப்பை வழங்காமல், ஏன் பின்வரிசை ஆட்டக்காரர்களை குறை கூற வேண்டும்.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் இதனை புரிந்துகொள்ள வேண்டும்; எதைக் கூறுகிறார் ரோஹித் சர்மா?
மூத்த வீரர்கள் அணிக்கு அவர்களது பங்களிப்பை வழங்கவில்லை. இந்திய அணியின் தற்போதைய நிலைக்கு காரணம், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை சரியாக வழங்காததே என்றார்.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் 3 ரன்கள் மற்றும் 9 ரன்கள் முறையே எடுத்தார். விராட் கோலி 36 ரன்கள் மற்றும் 5 ரன்கள் முறையே எடுத்தது குறிப்பிடத்தக்கது.