செய்திகள் :

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (கும்பம்)

post image

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் தனது புத்தி சாதுர்யத்தால் எளிதாக முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த ஆன்ண்டு நிரந்தர வருவாய் வரும் தொழில் அமையும். வெளியூர் பயணங்களை அடிக்கடி செய்து செய்தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். செய்கின்ற காரியங்களில் ஏற்படும் இடையூறுகளை சீரிய முயற்சிகளால் வெற்றியடையச் செய்வீர்கள். உறுதியுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். சார்ந்துள்ள துறையில் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் அறிவுரையால் தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள். நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பர். உறவினர்கள் அனைவரும் உங்களைப் புரிந்து கொள்வர். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கும் உயரத் தொடங்கும். தாய்வழி உறவுகளில் சிறப்புகள் உண்டாகும். மேலும் சிலருக்கு தாய்வழிச் சொத்துக்களும் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு. உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் மற்றவர்களுக்குப் பேரக்குழந்தை வாரிசும் உண்டாகும். எதையும் சமயமறிந்து பேசி வெற்றிபெறும் காலகட்டம் இது.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று அதிகரிக்கும். அதனால் சிக்கனத்தைக் கையாளவும். இதனால் புதிய ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் வேலை செய்யும் பக்குவம் உண்டாகும். உங்கள் பேச்சில் சிறிது தற்பெருமை தலை தூக்கும். பயணங்கள் செய்யும்போது புதிய இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும். வம்பு வழக்குகளில் விட்டுக் கொடுத்து சமாதானமாகவே போகப் பார்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நன்கு உழைப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் அனாவசிய விரோதம் எதுவும் வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத் திருப்திகரமாக முடிப்பார்கள். இடையூறுகள் தோன்றினாலும் அவைகளைச் சமாளித்து வெளிவந்து விடுவீர்கள். காலதாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடைந்துவிடும். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகளைச் யோசித்துச் செய்யவும்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகளும் வரும். தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே முடியும்.

கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் வரும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிட்டும். பிரச்னைகள் உண்டாகும்போது பொறுமையுடன் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.

மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். மற்றபடி ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். 

அவிட்டம்

இந்த ஆண்டு நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.

ஸதயம்

இந்த ஆண்டு உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு  மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். 

பூரட்டாதி

இந்த ஆண்டு தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த பொருளை வாங்கலாம்.

பரிகாரம்

சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.  தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.  சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சூரியன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை அளிப்பனவாக இருக்கும்.

பிக் பாஸ் 8: மீண்டும் மஞ்சரி - பவித்ரா மோதல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மீண்டும் பவித்ராவுடன் மஞ்சரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு முன்பு ஏஞ்சல்களும் டெவில்களும் போட்டியின்போது இருவரிடையே கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தன. விஜய் தொலைக்... மேலும் பார்க்க

ரசிகர்களைக் கவர்ந்த அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சி!

நடிகர் கமல்ஹாசன் சார்பில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு நடந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. தென்னிந்தியளவில் பிரபலமான இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். நடிகர் கமல்ஹாசனை வைத்து பேசும... மேலும் பார்க்க

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மேலும், துப்பாக்கிச் சூடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பி... மேலும் பார்க்க

ஷங்கர் இப்படி பேசியிருக்கக் கூடாது: அனுராக் காஷ்யப்

இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தம் தருவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற ஜன. 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ராம் சரண் மற்றும் கியா... மேலும் பார்க்க

பொங்கலுக்கு வெளியாகும் 8 திரைப்படங்கள்!

பொங்கல் பண்டிகையையொட்டி 8 திரைப்படங்கள் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளது.அடுத்த வார இறுதியில் இருந்து பொங்கல் விடுமுறை தொடங்குவதால், வணங்கான், கேம் சேஞ்சர், படைத் தலைவன் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கா... மேலும் பார்க்க

நேசிப்பாயா வெளியீட்டுத் தேதி!

இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கிய நேசிப்பாயா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’... மேலும் பார்க்க