ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முக்கியத்துவம் என்ன? ஷேன் வாட்சன் விளக்கம்!
மதம் மாறியது ஏன்? ரெஜினா விளக்கம்!
நடிகை ரெஜினா கேசண்ட்ரா தன் மதமாற்றம் குறித்து பேசியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.
இறுதியாக, நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் படங்களில் நடித்திருந்தார். தற்போது, விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: பிக் பாஸ் உளவியல் துறை பாடம்: ஜாக்குலினிடம் தீபக் விளக்கம்!
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரெஜினா தான் மதம் மாறியது ஏன் என்பது குறித்து பேசினார். அதில், “என் தந்தை இஸ்லாமியர். என் அம்மா கிறிஸ்துவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நான் இஸ்லாமியராகவே வளர்ந்தேன்.
பின், பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதால் ரெஜினாவாக இருந்தா நான் கேசண்ட்ராவை இணைத்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினேன். அதற்கான, கிறிஸ்துவ தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றேன்” எனத் தெரிவித்தார்.