செய்திகள் :

ஆன்மீகப் பேச்சாளரை ட்ரோல் செய்த யூடியூபர்கள் மீது வழக்கு!

post image

ஆன்மீகப் பேச்சாளரான அபினவ் அரோராவை யூடியூபர்கள் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமர்சிக்கும் யூடியூபர்கள் மீது உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் அபினவ் அரோரா புகார் அளித்துள்ளார்.

தில்லியைச் சேர்ந்த ஆன்மீகப் பேச்சாளரான அபினவ் அரோரா என்ற 10 வயது சிறுவனை விமர்சனம் செய்தும், கிண்டலாகவும் சில யூடியூபர்கள் விடியோ வெளியிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபினவை விமர்சித்தவர்கள் மீது அவரது வழக்கறிஞர் பங்கஜ் ஆர்யா புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, பங்கஜ் கூறியதாவது ``அபினவ் அரோராவுக்கு எதிராக விமர்சித்து விடியோ வெளியிடும் யூடியூபர்கள் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தகட்ட விசாரணை தேதி ஜனவரி 3 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தாலும், நாங்கள் விடமாட்டோம். இந்த யூடியூபர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? - ப. சிதம்பரம்

இதனைத் தொடர்ந்து, அபினவ் அரோரா கூறியதாவது, ``யூடியூபர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளைப் போல, நான் மோசமானவன் அல்ல. அவர்கள் என் மீது அபத்தமான பழியிடுகின்றனர். என்னுடைய ஆன்மீக வாழ்க்கை அனைத்தும் வணிக நோக்கம் என்று என் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், நான் கடவுள் கண்ணனின் வேலைக்காரன் மட்டுமே’’ என்று தெரிவித்தார்.

அபினவ் அரோரா, தனது 3 வயதில் இருந்தே ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, சில நாள்களுக்கு முன்னர் அவரது தாயார் கூறினார்.

அல்லு அர்ஜுன் தனித்துவிடப்பட்டது சரியல்ல: பவன் கல்யாண்

புஷ்பா - 2 திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் தனித்துவிடப்பட்டது சரியானதல்ல என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். காவல் துறையை தான் குறை ... மேலும் பார்க்க

வாக்காளர் அட்டை பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த 18 வயது இளம் பெண் ராதா, தில்லி தேர்தலையொட்டி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார். தேர்தல் என்ற ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்பதற்கான கடமை என்பதோடு மட்ட... மேலும் பார்க்க

பாஜகவுக்கு என்ன? ராகுலின் வியத்நாம் பயணம் குறித்து காங்கிரஸ் கேள்வி!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைந்து ஒரு சில நாள்களுக்குள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வியத்நாம் பயணம் மேற்கொண்டிருப்பதற்கு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்த... மேலும் பார்க்க

எல்லாம் தெரிந்த ஏஐ-யிடம் சொல்லக் கூடாத ஆறு விஷயங்கள்!

செயற்கை நுண்ணறிவு என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒற்றை வார்த்தையில் கட்டிப்போட்டிருக்கும் ஏஐ எனப்படும் செய்யறிவு உண்மையில் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உலகம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில... மேலும் பார்க்க

கோயில் அர்ச்சர்களுக்கு மாதம் ரூ.18,0000: ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி!

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 2025-ல் தில்லி சட்ட... மேலும் பார்க்க

கேரளத்தை மினி பாகிஸ்தான் என விமர்சித்த பாஜக அமைச்சர்!

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான நிதிஷ் ரானே கேரளத்தை மினி பாகிஸ்தான் என விமர்சித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் நிதிஷ் ராணே மகாரஷ்டிர முன்னாள் முதல்வரான நாரயண ராணேவின் மக... மேலும் பார்க்க