செய்திகள் :

கோயில் அர்ச்சர்களுக்கு மாதம் ரூ.18,0000: ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி!

post image

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

2025-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிரும் மாதம் ரூ.1000, ஜங்புரா தொகுதிக்கான கல்வி எனத் தொடர்ச்சியாகத் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தக் கோயில் அர்ச்சகர்களுக்கு மற்றும் குருத்வாராவின் கிராந்திகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.18,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

அர்ச்சகர்கள் மற்றும் கிராந்திகள் நமது சமூகத்தின் முக்கிய அங்கம். ஆனால் அவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினராகவே உள்ளனர்.

நாட்டிலேயே முதன்முறையாகக் கிராந்தி சமூகத்திற்கு ஆதரவளிக்கும் திட்டமான "பூஜாரி கிராந்தி சம்மன் யோஜனா" திட்டத்தை ஆம் ஆத்மி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அவர்கள் உதவித்தொகையாக ரூ. 18,000 பெறுவார்கள். இந்த திட்டத்திற்கான பதிவு நாளை முதல் தொடங்கும்.

செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களுக்கான பதிவு செயல்முறையை மேற்பார்வையிட உள்ளதாக அவர் கூறினார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. தலைநகரில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியின் தனிப்பட்ட உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது: நீதிமன்றம்

மனைவியின் உடல் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழமைவாத மனநிலையை கணவன்கள் கைவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாளம், உத்தரகண்டில் இருந்து வரும் பூஜை பொருள்கள்!

உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெறுவதையொட்டி, மக்களின் தேவையை அறிந்து பல்வேறு பகுதிகளிலிருந்து பூஜைப் பொருள்கள் பிரயாக்ராஜுக்கு கொண்டுவரப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு... மேலும் பார்க்க

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் பெயர்: மோடிக்கு கடிதம்!

மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய மாணவர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.தில்லி பல்கலைக்கழகத்துக்கு கட்... மேலும் பார்க்க

தில்லியில் மேம்பாலத்தைத் திறந்துவைத்தார் அதிஷி!

மேற்கு தில்லியில் ஆறு வழி பஞ்சாபி பாக் மேம்பாலத்தை அந்த மாநிலத்தின் முதல்வர் அதிஷி இன்று திறந்துவைத்தார். மேம்பாலத்தை திறந்துவைத்தபின் அதிஷி கூறியதாவது, பஞ்சாபி பாக் மேம்பாலத்தின் நீளம் 1.12 கி.மீ ஆகு... மேலும் பார்க்க

பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு பாஜகதான் பொறுப்பு: ஆம் ஆத்மி

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பாஜகதான் பொறுப்பு என... மேலும் பார்க்க

ரூ.5,000 வரவு வைக்கப்படும்.. பிரதமர் மோடி படத்துடன் மோசடி லிங்க்! மக்களே உஷார்!!

பாஜகவினர் அனுப்பியது போல பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் ஒரு லிங்க், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையல்ல, அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் வங்கிக் கணக்கிலிருக்கும் பணம் மோசடி செய்... மேலும் பார்க்க