செய்திகள் :

``தமிழகத்தின் ஆட்சி, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆகியுள்ளது” - செல்லூர் ராஜூ காட்டம்

post image

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகமெங்கும் இன்று ஆர்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டத்தில் செல்லூர் ராஜூ

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி மதுரையில் நடந்த ஆராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "கலைஞரின் ஆட்சியையே அதிமுகவினர் பார்த்தவர்கள், பனங்காட்டு நரி, யாருக்கும் அஞ்சம் மாட்டோம். போராட்டத்தில் ஈடுபடும் அதிமுகவினரை காவல்துறை உருட்டுகிறது, மிரட்டுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது.

பெண்கள் கல்வி கற்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது, பெண்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டமும் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக செயல்பட்டது, துணை ராணுவத்தால் பிடிக்க முடியாத சந்தன கடத்தல் வீரப்பனை அதிமுக ஆட்சியில் காவல்துறை சுட்டு பிடித்தது. தற்போது தமிழகத்தின் ஆட்சி குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆகியுள்ளது, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தி காட்டியுள்ளார்.  எதிர்க்கட்சியினர் வியக்கும் அளவிற்கு அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டியுள்ளார், தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை, மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா வேலை செய்து ஆட்சியை பிடித்துவிட்டார்.

ஆர்பாட்டம்

அதிமுக ஆட்சியில் 24,000 போராட்டங்கள் நடந்துள்ளன, அப்போதிருந்த சமூக ஆர்வலர்களெல்லாம் இப்போது எங்கே போனார்கள்? அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யா எங்கே சென்றார்? என்று தெரியவில்லை. திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறுகிறது.

பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் "சார்" என்பவர் யார்?, "சார்" எனும் நபரை காப்பற்ற திமுக அரசு கபட நாடகம் நடத்துகிறது, மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருக்கிறது. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என ஸ்டாலின் திமுக அரசை பாராட்டி பேசினார், ஆனால், தேசிய மகளிர் ஆணையமும், உயர் நீதிமன்றமும் குறை சொல்லி உள்ளது" என்று பேசினார்.

செல்லூர் ராஜூ

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தனர்.

"செல்லூர் ராஜூ கூறியது ஆங்கிலப் புத்தாண்டின் மிகப்பெரிய ஜோக்" - துரை வைகோ விமர்சனம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“500 அரசு பள்ளிகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக... மேலும் பார்க்க

பாமக: `அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை... முகுந்தன்தான் இளைஞரணி தலைவர்!' – மருத்துவர் ராமதாஸ்

புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில், தமிழ்நாடு – புதுச்சேரி பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ... மேலும் பார்க்க

கழுகார்: `கடுப்பில் மாண்புமிகுவும் மக்கள் பிரதிநிதியும்’ டு `ஓடும் வேட்பாளர்கள்; திண்டாடும் அதிமுக’

அட்வைஸ் செய்த தலைமை… அடக்கி வாசிக்கும் ‘கிரீன்’ மாஜி!“இனி, பகைக்கக் கூடாது..!”சூரியோதய மாவட்ட இலைக் கட்சியில், சுந்தரமானவருக்கு டஃப் ஃபைட் கொடுத்துவந்தார் ‘கிரீன்’ மாஜி. சுந்தரமானவரின் நடவடிக்கைகள் ஒவ... மேலும் பார்க்க

'யாராக இருந்தாலும் கைதுசெய்ய வேண்டும்!' - அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் குறித்து திருமாவளவன் பேச்சு

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் ப... மேலும் பார்க்க

ட்ரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா கார்; ``தீவிரவாத நடவடிக்கையாக இருக்கலாம்" - எலான் மஸ்க்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் இருக்கிறது. நேற்று ஹோட்டல் நுழைவாயிலில் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான... மேலும் பார்க்க

`நாம் ஆண்ட பரம்பரை...' - அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை!

சமூகநீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தி.மு.க அரசில், வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ள பி.மூர்த்தி, சமுதாய விழா ஒன்றில் க... மேலும் பார்க்க