ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஜெயம் ரவி - ஆர்த்தி பேச்சுவார்த்தை
விவகாரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் 1 நேரத்திற்கும் மேலாக மனம் விட்டு பேசினர்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.
இதனிடையே, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், திருமணப் பதிவை ரத்து செய்யக் கோரிய ஜெயம் ரவியின் மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் நம்பிக்கை!
விசாரணையை தொடர்ந்து, இருவரிடையே இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
குடும்ப நல நீதிமன்ற உத்தரவையடுத்து ஜெயம் ரவியும் ஆர்த்தியுடும் சமரச தீர்வு மையத்தில் சனிக்கிழமை ஆஜராகி 1 நேரத்திற்கும் மேலாக மனம் விட்டு பேசினர்.
இதையடுத்து வழக்கின் விசாரணை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.