செய்திகள் :

தென்காசி: தலை துண்டித்து விவசாயி படுகொலை!

post image

தென்காசியில் குளத்தில் காவல் பணியில் இருந்தவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் ஆழ்வார்க்குறிச்சியில் அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். விவசாயியான இருதயராஜ், அச்சங்குளத்தில் உள்ள மீன் பாசிக்குளத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அதனால், பெரும்பாலான நேரம் குளத்தின் காவல் பணியில்தான் இருப்பார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (டிச. 20) நள்ளிரவிலும் குளத்திற்கு காவல்பணிக்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில், இருதயராஜை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி, அவரின் தலையைத் துண்டித்தும் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இருதயராஜின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

சொத்து தகராறால்தான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், விரிவான விசாரணையின் முடிவிலேயே தெரிய வரும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காலையில், பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு பழிக்குப் பழியாக மாயாண்டி (25) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இரவில் தென்காசியில் இருதயராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

ஜெயம் ரவி - ஆர்த்தி பேச்சுவார்த்தை

விவகாரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் 1 நேரத்திற்கும் மேலாக மனம் விட்டு பேசினர். நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்... மேலும் பார்க்க

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள்: மத்திய அரசிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென என மத்திய அரசிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்திற்கான ம... மேலும் பார்க்க

சென்னையில் பனிமூட்டம் நிலவும்!

தமிழகத்தில் டிச.24 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நேற்று, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,... மேலும் பார்க்க

மெரினா களங்கரைவிளக்கத்தில் புதிய ரேடார் பொருத்தம்

சென்னை மெரினா கடற்கரையின் முக்கிய இடமான லைட் ஹவுஸ் 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மதுரையில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் குறித்து திட்ட இயக்குநர் தகவல்!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் குழு ஆய்வு செய்தனர்.மதுரை தியாகராசர் பொறியியல் கல்லுாரியில் 2010 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கள ஆய்வு தொடக்கம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் அர்ஜூனன் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பண... மேலும் பார்க்க