கோவை அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!
கோவை: கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க |மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்
இதில், லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலைகளில் சிதறி ஓடியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டதால் நல்வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
லாரியில் இருந்து கீழே விழுந்த உருளைகளை பொதுமக்கள் உடனடியாக எடுத்து சாலையோரம் வைத்து லாரியை சாலையில் இருந்து நிமிர்த்தி சாலை ஓரத்தில் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.