செய்திகள் :

ராபின் உத்தப்பாவுக்கு கைது ஆணை?

post image

ராபின் உத்தப்பாவின் நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் மோசடி செய்ததாக உத்தப்பா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இயக்குநராக உள்ள ஆடை நிறுவனமான செஞ்சுரி லைஃப்ஸ்டைல் பிராண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்துக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், உத்தப்பாவின் நிறுவனத்தில் இருந்து பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் அந்தத் தொகையை சேர்க்கப்படவில்லை. மொத்தம் ரூ.23 லட்சத்து 26 ஆயிரத்து 602 உத்தப்பா தரப்பில் பாக்கி உள்ளது.

இதையும் படிக்க:பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு..! ஸ்ரேயாஷ் ஐயர் பேட்டி!

இதனையடுத்து, அவரது நிறுவன ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பெங்களூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து, உத்தப்பாவிடம் தெரிவித்திருந்தும், அதனை அவர் கண்டுகொள்ளாததால், அவர் மீது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, உத்தப்பா மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதையடுத்து, உத்தப்பாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 23 லட்சத்து 36 ஆயிரத்து 602 ரூபாயை உத்தப்பா டிசம்பர் 27 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (மீனம்)

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் ... மேலும் பார்க்க

மதம் மாறியது ஏன்? ரெஜினா விளக்கம்!

நடிகை ரெஜினா கேசண்ட்ரா தன் மதமாற்றம் குறித்து பேசியுள்ளார்.சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (கும்பம்)

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)எடுத்த காரியம் எவ்வளவு கடினம... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (மகரம்)

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல்திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)எந்த காரியத்தையும் செய்யும... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (தனுசு)

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்முதல் பாதம் முடிய)தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் கட்டிப... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (விருச்சிகம்)

ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல்அனுஷம், கேட்டை முடிய)எந்த சூழ்நிலையிலும் எடுத்த வேலையினை கொட... மேலும் பார்க்க