உத்தரகண்டின் பித்ரோகரில் பெரும் நிலச்சரிவு
உத்தரகண்டின் பித்ரோகரில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் சாலை மூடப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம், பித்ரோகரில் உள்ள தவாகத் அருகே காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வினோத் கோஸ்வாமி தெரிவித்தார். இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தற்போது இந்தியா-சீனா எல்லையில் உள்ள லிபுலேக்கிற்குச் செல்லும் சாலையைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரைவிலேயே திறக்கப்படும். பிரதான சாலைக்கு மேலே கட்டுமானத்தில் உள்ள மற்றொரு சாலையில் இருந்து குப்பைகள் சரியத் தொடங்கியபோது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
பாப்கார்னுக்கும் பயன்படுத்தப்பட்ட காருக்கும் வரி!
தவாகட்-தர்சுலா தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். நிலச்சரிவில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த அவர், பாதையை விரைவில் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குப்பைகளை அகற்றி, விரைவில் பாதையை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தாமி முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.