Book Fair: "ஆனா ஒண்ணு.. எழுத்துக்கு மரணமில்ல" - எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும...
ஜல்லிக்கட்டுக்கு இணையவழி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இணையவழி அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கும் முறையை கைவிட வலியுறுத்தி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.ஏ. சின்னையா தலைமையில், ஜல்லிக்கட்டு அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும், காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு இணையவழியில் அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையை ரத்து செய்துவிட்டு, மீண்டும் விழாக் குழுவினா் மூலம் அனுமதிச் சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும்.
இந்த மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 12 கிராமங்கள் மட்டுமே அரசிதழில் இடம் பெற்றுள்ளன. இதில் திருத்தம் செய்து, அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக உத்தரவிட வேண்டும். ஜல்லிக்கட்டு காளை வளா்ப்பு, மாடுபிடி வீரா்கள் ஆகியோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றாா்.