ஆங்கிலப் புத்தாண்டு: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கொடைக்கானலில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளால் குவிந்தனா்.
கொடைக்கானலுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளின் வருகை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது. இதனால், தங்கும் விடுதிகளில் கூட்டம் அதிகரித்தது. மேலும், வில்பட்டி, மாட்டுப்பட்டி, மன்னவனூா், கூக்கால், புலியூா், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், வட்டக்கானல், செண்பகனூா், பூம்பாறை பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் புதன்கிழமை அதிக பனிப் பொழிவு காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனா்.
மேலும், வெள்ளிநீா் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கா்ஸ்வாக், பில்லர்ராக், பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, அமைதிப் பள்ளத்தாக்கு, பாம்பாா் அருவி, குணாகுகை உள்ளிட்ட இடங்களையும் சுற்றுலாப் பயணிகளின் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.