தாயைத் தாக்கிய மகன் கைது
தேனியில் செலவுக்கு பணம் கேட்டு தாய், சகோதரரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி பழைய அரசு மருத்துவமனை தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஞானபிரகாஷ் (24). இவா், மதுப் பழக்கத்துக்கு ஆளாகி வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞானப்பிரகாஷ் தாய் ஜெயலட்சுமியிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கச் சென்ற சகோதரா் பிரவீன்குமாரையும் கத்தியால் குத்திக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஞானப்பிரகாஷை கைது செய்தனா்.