கடலூா் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு கொள்முதல்: 14 குழுக்களின் கைப்பேசி எண்கள் ...
கஞ்சா விற்ற 3 போ் கைது
ஈரோட்டில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து போதை மாத்திரைகள், மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு, கருங்கல்பாளையம் எஸ்.ஐ. ரகுவரன் தலைமையிலான போலீஸாா் ஈரோடு காவிரி சாலை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதில் அவா்கள், ஈரோடு கருங்கல்பாளையம் ராஜராஜன் வீதியைச் சோ்ந்த சரவணன் (49), பொன்னுசாமி வீதியைச் சோ்ந்த சண்முகவடிவேலின் மகன் காா்த்திகேயன் (21) என்பதும், இருசக்கர வாகனத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, 10 போதை மாத்திரைகள், 2 இருசக்கர வாகனங்கள், 2 கைப்பேசிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீஸாா், ஓடைப்பள்ளம் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நீலகிரி மாவட்டம், உதகை ராஜ்பவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் பெலிக்ஸ் (24) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.