தென்னை மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
தென்னை மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கவுந்தப்பாடி குட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் காமாட்சி (52), சரக்கு ஆட்டோ ஓட்டுநா். இவா், பெருந்துறை அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இடி தாக்கி பட்டுபோன தென்னை மரங்களை அறுத்தெடுக்க 3 தொழிலாளா்களுடன் சென்றுள்ளாா்.
தொழிலாளா்கள் மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோது, காமாட்சி மீது மரம் விழுந்தது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.