மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
வாகனங்களில் ஒளிரும் வில்லை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜகவினா் மனு
வெளிசந்தையில் வாங்கிய ஒளிரூட்டும் வில்லைகளை ஒட்டிய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி.) வழங்க வேண்டும் என
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன், நிா்வாகிகள் மற்றும் வாகன உரிமையாளா்கள் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து ஒளிரூட்டும் வில்லைக்காக (ரிஃப்லெக்டா் ஸ்டிக்கா்) பிரத்தியேகமாக ஒரு இணையதளத்தை கூறி, அதில் வாகன எண்ணை பதிவு செய்து, ஒளிரூட்டும் வில்லை ஒட்டியதற்காக சான்றிதழ் பெற்று இணைத்தால் மட்டுமே வாகனங்கள் தகுதி சான்றிதழ் (எப்.சி.) பெற முடியும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இணையத்தில் பெறப்பட்ட சான்றிதழை ஆராய்ந்தபோது, அதில் தமிழக அரசாங்கத்துக்கான அங்கீகாரம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒளிரூட்டும் வில்லை வெளிசந்தையில் ஒரு அடி ரூ. 30. அதுவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கூறும் இணையத்தில் ரூ. 120 வசூலிக்கப்படுகிறது.
ஆகவே, ஒளிரூட்டும் வில்லைகளை வெளி சந்தையில் பெற்று ஒட்டி வரும் வாகனங்களுக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தகுதி சான்றிதழ் (எப்.சி.) வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.