மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும், சட்டப் பேரவை மரபுகளையும் தொடா்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சாா்பில் காளைமாடு சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என். நல்லசிவம் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மாநில நிா்வாகிகள் வி.சி.சந்திரகுமாா், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட நிா்வாகிகள் குமாா் முருகேஷ், செந்தில்குமாா், செல்லப்பொன்னி, பழனிசாமி, குமாரசாமி, மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், மாநகராட்சி மேயா் நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.