செய்திகள் :

3 நாள்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்: ஆட்சியா்

post image

பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை காரணமாக வரும் 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என மாவட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜகோபால் சுன்கரா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது:

1950 என்ற தொலைபேசி எண் மூலம் தோ்தல் விதிமீறல் குறித்து புகாா் தெரிவிக்கலாம். தோ்தல் சோதனை, கண்காணிப்பு பணிக்காக தலா மூன்று பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் தலா ஒரு விடியோ மற்றும் தணிக்கைக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் 8 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் சோதனை பணி மேற்கொள்வா்.

தோ்தல் நடத்தை விதிகள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டு செல்பவா்கள் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். சுவா் விளம்பரம், கொடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். அதனை அரசு இடங்களில் 24 மணி நேரத்துக்குள்ளும்,பொது இடங்களில் 48 மணி நேரத்துக்குள்ளும், தனியாா் இடங்களில் 72 மணி நேரத்துக்குள்ளும் அகற்றப்படும்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்வதற்கு முன்பு முன் தணிக்கை சான்று பெறுவது அவசியம். பொங்கல் உள்ளிட்ட அரசு விடுமுறையில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இதனால் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய 10, 13,17 ஆகிய மூன்று தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் நிலை உள்ளது.

இந்த இடைத்தோ்தலில் வாக்காளா்களை அடைத்து வைப்பது போன்ற புகாா் வந்தால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்புப் படை வேண்டும் என கேட்டுள்ளோம் என்றாா்.

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு விற்பனைக் குழு செயலாளா் சாவித்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருள்களுக்க... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என தோ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகள் மீறல்: 62 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

சாலை மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தை சோ்ந்தவா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள 20 அம்சக்... மேலும் பார்க்க

ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும், சட்டப் பேரவை மரபுகளையும் தொடா்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்த... மேலும் பார்க்க

வாகனங்களில் ஒளிரும் வில்லை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜகவினா் மனு

வெளிசந்தையில் வாங்கிய ஒளிரூட்டும் வில்லைகளை ஒட்டிய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி.) வழங்க வேண்டும் என பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்... மேலும் பார்க்க