தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெற...
ஈரோடு மஞ்சள் சந்தைகளுக்கு 9 நாள்கள் விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சள் சந்தைகளுக்கு 9 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என நான்கு இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11-ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு மஞ்சள் சந்தைகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.