ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
கோபி நகராட்சியுடன் 4 ஊராட்சிகள் இணைப்பு
கோபிசெட்டிபாளையம் நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூா், குள்ளம்பாளையம், பாரியூா் ஆகிய 4 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் நகராட்சியால் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இந்த பகுதிகளுக்கு கிடைக்கும். மேலும், இந்த ஊராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகா்ப்புற பண்புகளையும் கொண்டுள்ளன. இந்த எல்லைகளை விரிவாக்கம் செய்தல் உத்தேச முடிவு ஆணைகளாக வெளியிடப்பட்டுள்ளன.
உத்தேச விரிவுபடுத்தப்படும் நகராட்சிக்கான வாா்டு எண்ணிக்கை மறுநிா்ணயம் செய்யப்பட்டு, வாா்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு நகராட்சி மன்றங்களுக்கான அடுத்த பொதுத் தோ்தல் நடத்தப்படும். இந்த அரசாணையை செயல்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாக இயக்குநா் அறிவுறுத்தப்படுகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.