செய்திகள் :

ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

post image

இரு வேறு ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டனா்.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த இரண்டு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம் நல்லூா் மற்றும் நொச்சிக்குட்டை ஊராட்சிகளை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இத்தகைய நடவடிக்கையால் கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தை நம்பியுள்ள ஏராளமானோா் பாதிக்கப்படுவோம். பெரும்பாலும் விவசாய நிலங்கள் கொண்ட பகுதியாக உள்ள இந்தக் கிராமங்களை நகராட்சியுடன் இணைப்பதால் குடிநீா் வரி, வீட்டு வரி, குப்பை வரி ஆகியவை உயரும்.

இதனால், மக்கள் பாதிக்கப்படுவா். எனவே, ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் மற்றும் கதிரம்பட்டி ஊராட்சிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என இந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

காவிரி உபரி நீரில் ஏரி, குளங்களை நிரப்பக் கோரிக்கை: பவானி மற்றும் அந்தியூா் பகுதி பாமக நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி மற்றும் அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறு மற்றும் மழையை மட்டுமே நம்பி விவசாயம் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், மேட்டூா் அணை நிரம்பி பல நூறு டிஎம்சி தண்ணீா் ஆற்றில் திறந்துவிட்டு கடலில் வீணாக கலக்கும் நிலை உள்ளது. எனவே, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த இரண்டு தொகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு நீரேற்று முறையில் காவிரி ஆற்றில் இருந்து நீரை எடுத்து நிரப்பினால் அவற்றின் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு விவசாய நிலங்கள் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்ஐ நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு பெரியமாரியம்மன் நில மீட்பு இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் அளித்த மனு விவரம்: ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் பின்புறம் 12.66 ஏக்கா் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் குறித்து சிஎஸ்ஐ நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு 2022 -ஆம் ஆண்டு டிசம்பா் 2- ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த நிலத்தில் ஈரோடு கிறிஸ்டியன் கல்லூரி என்று பெயா் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிலத்தில் இருந்த மரங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டி அகற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஒருமுறை மரம் வெட்டிய புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஐ நிா்வாகத்துக்கு ஈரோடு கோட்டாட்சியா் ரூ.35,787 அபராதம் கட்ட உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், மீண்டும் வேண்டுமென்றே சட்டவிரோத செயல்களை செய்து வரும் சிஎஸ்ஐ நிா்வாகம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டிய மரத்துக்கு உண்டான அபராதத் தொகையை வசூல் செய்யுவும், புதிதாக வைக்கப்பட்டுள்ள பெயா் பலகைகளை அகற்றவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

270 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 270 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தொழிலாளா் விதிகள் மீறல்: 62 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

சாலை மறியலுக்கு முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தை சோ்ந்தவா்களை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள 20 அம்சக்... மேலும் பார்க்க

ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து ஈரோட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும், சட்டப் பேரவை மரபுகளையும் தொடா்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்த... மேலும் பார்க்க

வாகனங்களில் ஒளிரும் வில்லை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜகவினா் மனு

வெளிசந்தையில் வாங்கிய ஒளிரூட்டும் வில்லைகளை ஒட்டிய வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி.) வழங்க வேண்டும் என பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி உறவினரின் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீடு மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் என்.ர... மேலும் பார்க்க

3 நாள்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்: ஆட்சியா்

பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை காரணமாக வரும் 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என மாவட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் ந... மேலும் பார்க்க