அமெரிக்க கார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி!
நியூ ஓர்லியன்ஸ் துப்பாக்கி தாக்குதலைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூ ஓர்லியன்ஸில் 15 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க |அமெரிக்கா: கூட்டத்திற்குள் நுழைந்த கார்! 10 பேர் பலி - புத்தாண்டில் தீவிரவாத தாக்குதல்?
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நியூ ஓர்லியன்ஸில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் இருக்கின்றன. இந்த சோகத்திலிருந்து அவர்கள் குணமடையும்போது அவர்கள் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமெரிக்கா: காா் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஓர்லியன்ஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற பா்பன் வீதியில் புத்தாண்டையொட்டி ஏராளமானவா்கள் புதன்கிழமை அதிகாலை குழுமியிருந்தனா். அப்போது அந்தப் பகுதிக்கு பிக்-அப் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த அந்த நபா், அதை அங்கிருந்த கூட்டத்துக்குள் பாயச் செய்தாா். இந்தத் தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது.