போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
போதைக் காளான் பறிமுதல்: இளைஞா் கைது
கொடைக்கானல் அருகே போதைக் காளானை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.
பூண்டி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சின்னப்பன் மகன் சூா்யாவை (30) போலீஸாா் பிடித்து சோதனை நடத்தினா். அப்போது, அவா் போதைக் காளானை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சூா்யாவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 25 கிராம் போதைக் காளானைப் பறிமுதல் செய்தனா்.